புட்டபர்த்தி, பிரசாந்தி நிலையத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26டிச 2018 05:12
புட்டபர்த்தி: புட்டபர்த்தி சத்யசாய் பிரசாந்தி நிலையத்தில் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு, நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
புட்டபர்த்தி, சத்யசாய் பிரசாந்தி நிலையத்தில் கிறிஸ்துமஸ் விழா நேற்று காலை சிறப்பு ஆராதனையிடன் துவங்கியது. விழாவில் பள்ளி மாணவ, மாணவிகளின் பேண்ட் இசை வாத்தியம், பஞ்சவாத்தியம் வாசிக்கப்பட்டது. தொடர்ந்து, மாலை சொற்பொழிவு மற்றும் பல்வேறு குழுவினரின் இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தொடர்ந்து குழந்தைகளின் இசை வழிபாடு நடைபெற்றது. விழாவில் 13 நாடுகளில் இருந்து 56 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு, சத்யசாய்பாபா மற்றும் கிறிஸ்துமஸ் பாடல்களை பாடி பிரார்த்தனை செய்தனர். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மங்கள ஆராத்தியுடன் விழா நிறைவடைந்தது.