பரமக்குடி: பரமக்குடி தரைப்பாலம் அருகில் உள்ள தர்மசாஸ்தா கோயிலில் ஐயப்பசுவாமி – புஷ்கலாதேவி திருக்கல்யாணம் நடந்தது. பரமக்குடி தர்மசாஸ்தா ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் கேரள மாநிலம் ஆரியங்காவு ஐயப்ப சுவாமி கோயிலில் நடப்பது போன்றே ஒவ்வொரு ஆண்டும் திருக்கல்யாணம் நடப்பது வழக்கம். இதன் படி ஆரியங்காவு ஐயப்பன் கோயிலுக்கு அடுத்த படியாக, ஐயப்பசுவாமி கோயிலில் டிச., 25 இரவு 7:00 மணிக்கு தர்மசாஸ்தா – புஷ்கலாதேவி நிச்சயதார்த்தம், அபிஷேகம், தீபாராதனை நடந்தது.
தொடர்ந்து நேற்று காலை 8:00 மணிக்கு மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலம், திருமாங்கல்ய ஊர்வலம் மேள, தாளம் முழங்க வந்தது. பின்னர் பெண் வீட்டார் அழைப்பு, மாலை மாற்றல் நிறைவடைந்து 9:00 முதல் 12:30 மணிக்குள் திருக்கல்யாணம் நடந்தது. இரவு சுவாமி, தாயாருடன் மணக்கோலத்தில் பட்டண பிரவேசம் வந்தார். ஏற்பாடுகளை தர்மசாஸ்தா சேவா சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர். இன்று காலை மண்டல பூஜை, 108 சங்காபிஷேகம் நடக்கிறது.