பதிவு செய்த நாள்
02
ஜன
2019
01:01
ஓசூர்: ஓசூர், மலை மீதுள்ள மரகதாம்பிகை உடனுறை சந்திரசூடேஸ்வரர் கோவிலில், ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நேற்று காலை, 4:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. தமிழகம் மட்டுமின்றி, கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த பக்தர்கள் வந்ததால், மதிய நேரத்தில் நடை சாத்தப்படாமல், சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதேபோல், கோட்டை மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. சூளகிரி வரதராஜ பெருமாள் கோவில், கோபசந்திரம் தட்சிண திருப்பதி கோவில், ஓசூர் மலை மீதுள்ள பெருமாள் கோவில்களில் சுவாமிக்கு சிறப்பு பூஜை, அபி ?ஷக, ஆராதனை நடந்தன. ஏரித்தெரு ஆஞ்நேயர், ராமர் கோவில், கோகுல் நகர் சாய்பாபா கோவில், பாகலூர் சாலையில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. மேலும் கெலமங்கலம், தேன்கனிக்கோட்டையில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.
* தர்மபுரி மாவட்டம், அரூர் பழையபேட்டை கரியபெருமாள் கோவிலில், புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு அபி ?ஷகம் நடந்தது. இதே போல், அரூர் மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள வாணீஸ்வரர் கோவில், மேட்டுத்தெருவில் உள்ள பெருமாள்கோவில், தீர்த்தமலையில் உள்ள தீர்த்தகிரீஸ்வரர் கோவில், கடத்தூர் அடுத்த மணியம்பாடி வெங்கட்ரமண சுவாமி பெருமாள் கோவில், மொரப்பூரில் உள்ள சென்னகேசவ மற்றும் வரதராஜ பெருமாள் உள்ளிட்ட கோவில்களில், ஏராளமான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
* கிருஷ்ணகிரி, புதுப்பேட்டை பெரிய மாரியம்மன் கோவிலில், அம்மனுக்கு அபி ?ஷகம் மற்றும் ராஜ அலங்காரம் நடந்தது. அம்மனை சுற்றி, ஒரு லட்சம் ரூபாய் நோட்டுகளை அலங்கரித்திருந்தனர். நேற்று பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று, சுவாமி தரிசனம் செய்தனர். ராசுவீதி துளுக்காணி மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு அபி?ஷகம், ஆராதனை நடந்தது. சப்-ஜெயில் சாலையில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில், விநாயகருக்கு வெள்ளி கவச அலங்காரம் செய்யப்பட்டது. பழையபேட்டை லட்சுமி நாராயண சுவாமி கோவில், நேதாஜி சாலை பிரசன்ன பார்வதி சமேத சோமேஸ்வரர் கோவில், டான்சி வளாகத்தில் உள்ள விநாயகர் கோவில், புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உள்ள வினை தீர்த்த விநாயகர் கோவில்களில் சுவாமிக்கு சிறப்பு அபி ?ஷகம், அலங்காரம் செய்யப்பட்டது.