அனுப்பபட்டியில் ஆண்கள் மட்டும் பங்கேற்ற கோயில் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஜன 2019 02:01
திருமங்கலம்:திருமங்கலம் அருகே அனுப்பபட்டியில் ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கோயில் விழாவில் அசைவ அன்னதானம் நடந்தது.இக்கிராமத்தில் கரும்பாறை முத்தையா கோயில் உள்ளது. இங்கு மார்கழி மாதம் 3 நாட்கள் திருவிழா நடக்கும். இவ்விழாவில் ஆண்கள் மட்டுமே பங்கேற்பர். மூன்றாம் நாள் இரவில் சக்தி கிடா வெட்டப்படும். அடுத்தடுத்து நேர்த்தி கடன் கிடாய்கள் வெட்டப்படும். நேற்று முன்தினம் இரவு 50க்கும் மேற்பட்ட கிடாய்கள் வெட்டப்பட்டன. அங்கேயே சமைக்கப்பட்டது. அனுப்பபட்டி, கரடிக்கல், உரப்பனுார் உள்ளிட்ட சுற்றுக்கிராமத்தை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு காலை 9:00 மணி முதல் மதியம் வரை அசைவ அன்னதானம் வழங்கப்பட்டது. சாப்பிட்ட இலைகளை அங்கேயே வைத்து விட்டு எழுந்து விடுவர். அவை காற்றில் பறந்து சென்று விடும் என்பது இக்கிராம மக்களின் நம்பிக்கை.