பதிவு செய்த நாள்
22
ஜன
2019
10:01
பழநி: தைப்பூசவிழாவை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டம், பழநி மலைக்கோவில் உட்பிரகாரம், 2,000 கிலோ பூக்களால் அலங்கரிக்கப் பட்டது.இதற்காக, பெங்களூருவில் இருந்து பூக்கள் வரவழைக்கப்பட்டன. இவற்றுடன் செவ்வந்தி, மல்லிகை பூக்களால் உட்பிரகாரத்தில் வேல், ஓம் சரவணபவ, மயில் வடிவங்களில் ரங்கோலிகள் வரையப்பட்டு இருந்தன.
ஜோதி தரிசன விழாகடலுார் மாவட்டம், வடலுாரில் வள்ளலார் நிறுவிய சத்ய ஞான சபை உள்ளது. இங்கு, நேற்று காலை, 6:00 மணி, 10:00; மதியம், 1:00; இரவு, 7:00; 10:00 இன்று காலை, 5:30 மணி என, ஆறு காலங்களில் கரும் பெருந்திரை, நீலப் பெருந்திரை, பச்சைத்திரை, செம்மைத்திரை, பொன்மைத்திரை, வெண்மைத்திரை, கலப்புத்திரை என, ஏழு திரைகள் நீக்கி, ஜோதி தரிசனம் காண்பிக்கப் பட்டது.வள்ளலார் சித்தி பெற்ற சித்தி வளாகத்தில், திருஅறை தரிசனம் நாளை, நடைபெறும். தீர்த்தவாரிதிருவண்ணாமலை அருணாச லேஸ்வரர் கோவிலில், சித்திரை மாதம் முதல், பங்குனி வரை, ஆறு, குளங்களில், ஒவ்வொரு மாதமும் தீர்த்தவாரி நடக்கும். அதன்படி, தை மாதம் பூச நட்சத்திரமான நேற்று, ஈசான்ய குளத்தில், சூல வடிவில் அருணாசலேஸ்வரர் மூழ்கி, பகல், 12:00 மணிக்கு தீர்த்தவாரி நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். திருவண்ணாமலையை ஆண்ட வள்ளாள மஹாராஜாவுக்கு, அருணாசலேஸ்வரரே குழந்தையாக பிறந்தார் என, தல புராணங்கள் கூறுகின்றன.அதன்படி, தீர்த்தவாரி முடிந்த நிலையில், வள்ளாள மஹாராஜா போரில் இறந்த செய்தி, அருணாசலேஸ்வரருக்கு தகவல் தெரிவிக்கும் நிகழ்ச்சி, இதைக் கேட்டு, மேள, தாளம் முழங்காமல், குளக்கரையில் இருந்து, அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு, திரும்பும் நிகழ்ச்சி நடந்தது.