பணத்தில் அலங்கரிக்கப்பட்ட மாட்டுடன் வந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஜன 2019 11:01
திருப்பூர்: தைப்பூசத்தை முன்னிட்டு, சிவன்மலையில், நேர்த்தி கடன் செலுத்த, பணத்தால் அலங்கரிக்கப்பட்ட மாட்டுடன் பக்தர்கள் வந்து வழிபட்டனர்.காங்கயம், சிவன்மலை ஸ்ரீ சுப்ரமணியசுவாமி கோவிலில், தைப்பூச தேர்த்திருவிழா கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. தேரோட்டம், நேற்று முன்தினம் மாலை துவங்கியது. பக்தர்களால் வடம் பிடிக்கப்பட்டு, தேர் தெற்கு வீதியில் நிறுத்தப்பட்டது.இந்நிலையில், பக்தர்கள் விரதம் இருந்து, காவடி எடுத்து, சிவன்மலைக்கு வந்து தங்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். ஒரு சிலர் தங்களின் காளை மாடுகளை அலங்கரித்து காவடியுடன் கொண்டு செல்கின்றனர். அந்த காளைக்கு பக்தர்கள் பணம் தோரணமாக போட்டு அலங்காரம் செய்துள்ளது பக்தர்களை கவர்ந்துள்ளது.அதன்பின், பணத்தை கோவில் உண்டியலில் காணிக்கை செலுத்தினர். பக்தர்களுக்கு ஆங்காங்கே கூடாரம் போட்டு அன்னதானமும் வழங்கி வருகின்றனர்.