சிங்கம்புணரி: சிங்கம்புணரி வாசவி கன்னிகா பரமேஸ்வரி கோயிலில் கவுரி நட்சத்திர பூஜை நடந்தது. தை மூன்றாவது வெள்ளியையொட்டி நடத்தப்பட்ட பூஜையில் கவுரி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. அம்மனுக்கு முன் 27 நட்சத்திரங் களுக்கான தேவதைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. அனைத்து நட்சத்திரக்காரர்களும் நன்மை பெற வேண்டி நடத்தப்பட்ட இந்த பூஜையில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். பூஜை ஏற்பாடுகளை சிங்கம்புணரி ஆர்ய வைஸ்ய மகளிர் சங்கத்தினர் செய்திருந்தனர்.