மயிலாடுதுறை: நாகை மாவட்டம் மயிலாடுதுறை தாலுகா திருமங்கலம் கிராமத்தில் பழைமை வாய்ந்த அருள்மிகு பூலோக நாயகி சமேத பூலோக நாதர் கோயில் அமைந்துள்ளது. கி.பி. 3ம் நூற்றாண்டு க்கு முந்தைய காலத்தை சார்ந்த இக்கோயிலில் ஒலி எழுத்துக்கள் எனப்படும் தற்போதைய தமிழ் எழுத்துக்களுக்கு முன்னோடியாக விளங்கிய குறியீடு எழுத்துக்கள் அடங்கிய பல்வே று கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. இந்த கோயில் மிகவும் தொன்மை வாய்ந்ததாக கருதப்படுகின்றது. இந்த கோயிலின் முன் மண்டபம், மகா மண்டபம், அர்த்த மண்டபம் ஆகிய வற்றில் ஏராளமான கல்தூண்கள் அமைந்துள்ளன.
இதில் நாட்டியக் கலையின் அபிநயங்கள் 60 க்கும் மேற்பட்ட கையளவு சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன. மேலும் இங்குள்ள கா லசம்ஹார மூர்த்தி கல்லினால் செய்யப்பட்டவர். ஏராளமான சிற்பங்கள், கல்வெட்டுகள் இந்த கோயில் சுற்றுச்சுவர்களில் காணப்படுகின்றன.
புராதானமான இக்கோயிலில் சுவாமி மார்க்கண்டேயருக்குஅருள்புரிந்த திருத்தலம், மேலும் குபேரன் இத்தலத்தில் சுவாமியை வழிபட்டு பேறு அடைந்ததாக கூறப்படுகிறது. இத்தகைய சிறப்பு மிக்க கோயிலின் திருப்ப ணிகள் செய்யப்பட்டு நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்கை முன்னிட்டு கடந்த 6ம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கப்பட்டது. நேற்று (பிப்., 10ல்) காலை 4ம் கால யாக பூஜைகள் முடிந்து மகா பூர்ணாஹூதி நடைபெற்றது.
தொடர்ந்து கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு ஊர்வலமாக விமானத்தை அடைந்தது. பின்னர் கடங்களில் இருந்த புனிதநீரை கொ ண்டு கோபுரகலசங்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை மோகன் குருக்கள் தலைமையிலானோர் நடத்திவைத்தனர். அதனையடுத்து சுவாமி, அம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.
11.எள்.ஒய்.எல்.01...திருமங்கலம் அருள்மிகு பூலோக நாயகி சமேத பூலோக நாதர் கோயில் கும்பாபிஷேகம் நேற்று (பிப்., 10ல்) நடைபெற்றது.