பூவரசங்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோவிலில் 210வது ஸ்வாதி ஹோமம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24பிப் 2019 12:02
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த பூவரசங்குப்பம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோவிலில் இன்று 24ம் தேதி 210வது ஸ்வாதி ஹோமம் நடந்தது. அதனையொட்டி, ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோவிலில் இன்று 24ம் தேதி காலை 6:00 மணிக்கு மூலவருக்கு அபிஷேகம், 9:00 மணிக்கு மூலவர் தங்கக்கவசம் சாற்றப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர், நரசிம்ம சுதர்சன தன்வந்திரி ஹோமம், மதியம் 12:00 மணிக்கு வசோதாரா ஹோமம் நடைபெற்றது, 12:30 மணிக்கு மகா பூர்ணாஹூதி, கலச தீர்த்தத்தில் மூலவருக்கு அபிஷேகம் நடைபெற்றது. ஏற்பாடுகளை செயல் அலுவலர் ஜெயக்குமார் தலைமையில் அர்ச்சகர் பார்த்தசாரதி செய்திருந்தனர்.