நத்தம்: நத்தம் மாரியம்மன் கோயில் மாசித் திருவிழாவை முன்னிட்டு அன்ன வாகனத்தில் அம்மன் பவனி வந்தார். இக்கோயிலில் கடந்த பிப்.11 ல் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது.
மறுநாள் கரந்தமலை கன்னிமார் தீர்த்தம் எடுத்து வந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி விரதம் துவங்கினர். கடந்த பிப்.15 அன்று இரவு மயில் வாகனத்தில் எழுந்தருளி மின் அலங்கார ரதத்தில் அம்மன் நகர்வலம் சென்றார். பிப்.19 ல் அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பவனி சென்றார். நேற்று முன்தினம் அம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும் அபிேஷகங்கள் நடந்தது. இரவு அன்ன வாகனத்தில் எழுந்தருளிய அம்மன் மின் அலங்கார ரதத்தில் முக்கிய வீதிகள் வழியாக பவனி சென்றார். வருகிற பிப்.26 அன்று பக்தர்கள் அக்னி சட்டி எடுத்தல், கழுமரம் ஏறும் நிகழ்ச்சிகள் நடக்கிறது. இதை தொடர்ந்து காப்பு கட்டிய பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடக்க உள்ளது. மறுநாள் மஞ்சள் நீராட்டு, பூப்பல்லக்கில் அம்மன் நகர்வலம் செல்வதுடன் விழா நிறைவடைகிறது.