உடுமலை: உடுமலை அருகே திருமூர்த்திமலை பாலாற்றங்கரையில், பிரசித்தி பெற்ற சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் ஒருங்கே எழுந்திருளியுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலில் ஆண்டு தோறும் மகாசிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.
பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருவர். இந்த ஆண்டு வரும் 4ம் தேதி மகாசிவராத்திரி சிறப்பு பூஜைகள் மற்றும் நிகழ்ச்சிகள் நடக்கின்றன. அன்று மாலை, 4:00 மணிக்கு திருச்சப்பரம் பூலாங்கிணரிலிருந்து கோவிலுக்கு வந்து சேர்கிறது.இரவு 8:00 மணிக்கு முதற்கால ஜாமபூஜையும், 10:00 மணிக்கு இரண்டாம் கால பூஜையும், 5ம் தேதி அதிகாலை 2:00 மணிக்கு மூன்றாம் கால பூஜையும், 4:00 மணிக்கு நான்காம் கால பூஜை, மற்றும் சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. அதிகாலை 5:00 மணிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் 16 தீபதரிசனம் நடக்கிறது.