சாத்துார் : சாத்துார் கே.கே.நகர் ஸ்ரீசக்திவிநாயகர் கோயில் லட்சுமிஹயக்ரீவர் சன்னிதியில் 10 மற்றும் பிளஸ்2 பொது தேர்வு எழுதும் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற சிறப்பு பூஜைகள் நடந்தது. கோயில் நிர்வாகிகள், கே.கே.நகர் மக்கள் சார்பில் நடந்த இதில் வெங்கடேஷ்வரா பேப்பர் போர்ட்ஸ் அன்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவன இயக்குனர் வெங்கட்ராமன் பூஜையில் வைக்கப்பட்ட பேனாக்களை வழங்கினார். பூஜையில் பங்கேற்ற கம்ம மகாஜன டிரஸ்ட் மகளிர் பள்ளி மாணவிகள், குழந்தைகளுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.