நெல்லிக்குப்பம்: கீழ்பட்டாம்பாக்கம் ஓசூரம்மன் கோவிலில் அஸ்வமேத யாகம் நடந்தது. நெல்லிக்குப்பம் கீழ்பட்டாம்பாக்கம் ஓசூரம்மன் கோவிலில் கடந்த 7ம் தேதி கொடியேற்றத்துடன் பிரமோற்சவம் துவங்கியது.
தினமும் சிறப்பு அபிஷேகமும் மாலையில், சிங்கம், நாகம், அன்னம், யானை போன்ற வாகனங்களில் அம்மன் வீதிஉலா நடந்து வருகிறது. நேற்று முன்தினம் நான்காம் நாள் உற்சவத்தை முன்னிட்டு காலை கணபதி அஷ்டலட்சுமி துர்க்கா ஹோமங்கள் நடந்தது. குதிரையை நிற்க வைத்து அஸ்வமேத யாகம் நடந்தது. திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் குருக்கள் ரமேஷ் தலைமையில் பூஜைகள் நடந்தது. 108 சங்குகளில் புனிதநீர் நிரப்பி சிறப்பு யாகம் நடத்தி அம்மனுக்கு சங்காபிஷேகம் நடத்தினர். குதிரையுடன் அம்மன் வீதி உலா நடந்தது. இரவு நாகம் வாகனத்தில் அம்மன் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருகைலாய வாத்திய குழுவினரின் மங்கள இசை நிகழ்ச்சி நடந்தது. 16ம் தேதி தெப்போற்சவமும் நடக்கிறது.