பதிவு செய்த நாள்
13
மார்
2019
01:03
விருத்தாசலம்: விருத்தாசலம், கொளஞ்சியப்பர் கோவிலில் பங்குனி உத்திர பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவிலில் பங்குனி உத்திரப் பெருவிழாவையொட்டி, நேற்று முன்தினம், கிராம தேவதைகள், செல்லியம்மன், அய்யனார் மற்றும் பரிவார தேவதைகளுக்கு காப்பு கட்டும் உற்சவம் நடந்தது. நேற்று காலை, கொடியேற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.
இதனையொட்டி மூலவர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். தினமும் காலை, இரவு வீதியுலா நடக்கிறது. 6ம் நாள் விழாவாக வரும் 20ம் தேதி காலை 4:30 மணிக்கு மேல் 6:10 மணிக்குள் திருத்தேர் வடம் பிடித்தல் நடக்கிறது. 21ம் தேதி அதிகாலை கோவிலில் இருந்து உற்சவ மூர்த்திகள் திருமுதுகுன்றத்திற்கு எழுந்தருளி அபிஷேக ஆராதனைகளுடனும், காவடிகளுடனும் திருமுதுகுன்றத்தில் வீதி உலாவாக வந்து, கொளஞ்சியப்பர் கோவிலை வந்தடைந்து, மணிமுக்தாற்றில் மாலையில் தீர்த்தவாரியும், இரவு கொடியிறக்கமும் நடக்கிறது.