Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, ... சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) பெண்களால் மேன்மை சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) ...
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் ((14.4.2026 முதல் 14.5.2026 வரை)
கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) வளர்ச்சிக்கான மாதம்
எழுத்தின் அளவு:
கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) வளர்ச்சிக்கான மாதம்

பதிவு செய்த நாள்

11 ஏப்
2019
04:04

கண்ணியம் தவறாத கடக ராசி அன்பர்களே!

உங்களுக்கு இந்த மாதம் வளர்முகமான காலம். சூரியன் சாதகமான இடத்திற்கு வந்துள்ளார். ஏப்.26க்கு பிறகு  புதனும், மே6 வரை செவ்வாயும் நன்மைகளை தருவார். உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் இணைந்து இருக்கும் கேது மற்றும் சனிபகவான் மாதம் முழுவதும் நற்பலனை தருவார்கள். செவ்வாய் 11-ம் இடத்தில் இருப்பது  சிறப்பானது.

காரிய அனுகூலம் ஏற்படும். ஏப்ரல் 26 வரை புதன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் மனதில் வேதனை வரலாம். சிலர் பொல்லாப்பை சந்திக்கலாம். பொறுமையுடன் இருக்கவும், விட்டுக்கொடுத்து போகவும். சிலர் தீயோர் சேர்க்கைக்கு ஆளாகலாம். எனவே யாரிடமும் பார்த்து எச்சரிக்கையுடன் பழகவும்.அதன் பிறகு பெண்களின் ஆதரவு இருக்கும். பெண்களால் நன்மை கிடைக்கும். பொன், பொருள் சேரும்.

குடும்பத்தில் வசதிகள் பெருகும். தடைபட்ட திருமணப்பேச்சு நடக்கும். சுபநிகழ்ச்சிகள் கைகூடும். குடும்பத்தில் குதூகலம் ஏற்படும். நினைத்தது நிறைவேறும். பண வரவு அதிகரிக்கும். கேதுவால் பொருளாதார வளம் பெருகும். அபார ஆற்றல் பிறக்கும். நகை, ஆபரணங்கள் வாங்கலாம். புதிய வீடு, வாகனம் வாங்க யோகமுண்டு. சகோதரர்கள் ஆதரவுடன் இருப்பர். குறிப்பாக ஏப்.14 மே10,11ல் அவர்களால் நன்மை கிடைக்கும். ஏப்ரல் 19,20,21ல் உறவினர் வகையில் மனக்கசப்பு வர வாய்ப்பு உண்டு. அப்போது அவர்களிடம்  நெருக்கம் வேண்டாம். ஆனால் மே6,7ல் அவர்கள் வருகையால் நன்மை கிடைக்கும்.

பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சிறப்பான முன்னேற்றத்தைக் காணலாம். புதிய பதவியும் தேடி வரும்.அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். அவர்கள் தங்கள் கோரிக்கைகளை மே6க்குள் கேட்டு பெற்று கொள்ளவும். ஏப்.26க்கு பிறகு தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு வேலைப்பளு குறையும். சக பெண் ஊழியர்கள் ஆதரவுடன் இருப்பர்.  மே4,5ம் தேதிகள் சிறப்பான நாட்களாக அமையும்.

வியாபாரிகள் நல்ல வளர்ச்சியை காணலாம். தொழிலில் ஆற்றல் மேம்படும். லாபத்திற்கு குறைவிருக்காது. புதிய தொழில் அனுகூலத்தைக் கொடுக்கும். தரம் தாழ்ந்த பெண்ணின் சேர்க்கையால் அவப்பெயரையும்  பணத்தை விரயமாக்கியவர்கள் அவர்கள் பிடியில் இருந்து ஏப்.26க்கு பிறகு விடுபடுவர். அதன்பின் தொழிலில் லாபம் அதிகரிக்கும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் முன்னேற்றம் அடையும். பங்கு வர்த்தகம் நல்ல லாபத்தை தரும். கூட்டுத்தொழில் நல்ல வளர்ச்சியைத் தரும். நண்பர்கள் தக்க சமயத்தில் உதவிக்கரம் நீட்டுவர். பகைவர்களின் சதியை முறியடிக்கும் வலிமை பெறுவீர்கள். ஏப்.26 வரை  உழைப்புக்கேற்ற வளர்ச்சி தானாகவே வரும்.  ஏப்.15,16 மே8,9,12,13ல் சந்திரனால்  தடைகள் வரலாம். ஆனால் ஏப்.22,23ல் எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும். கலைஞர்கள் முன்னேற்றம் காண்பர். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.  அரசியல்வாதிகள், சமூக சேவகர்கள் நற்பெயர் எடுப்பர். சிலருக்கு புதிய பதவி கிடைக்கும். மே1,2,3ல் மனக்குழப்பம் ஏற்படலாம்.

மாணவர்கள் சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். ஏப்.26க்கு பிறகு முன்னேற்றம் காண்பர். தீய சகவாசத்திற்கு விடைகொடுப்பர்.  தேர்வில் நல்ல மதிப்பெண் கிடைக்கும். போட்டிகளில் பங்கேற்று வெற்றி காண்பர்.

விவசாயிகள் கரும்பு, எள், பழவகைகள், பாசிப்பயறு, கிழங்கு வகைகளில் கூடுதல் வருமானம் கிடைக்கும். கால்நடை செல்வம் பெருகும். புதிய சொத்து மே 6க்குள் வாங்கலாம் அதன் பிறகு வழக்கு, விவகாரங்களில் சுமாரான முடிவு கிடைக்கும். புதிய வழக்குகளில் சிக்க வேண்டாம்.

பெண்கள் குடும்பத்தாரிடம் நன்மதிப்பை பெறுவர். ஏப்.26க்கு பிறகு சொந்தபந்தங்களின் வருகை இருக்கும். கணவரின் அரவணைப்பு கிடைக்கும். சிலர் குழந்தை பாக்கியம் பெறுவர். அக்கம்பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். சிலருக்கு புதிய பதவி தேடி வரும். ஏப்.17,18ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். ஏப்.26,27,28ல் விருந்து, விழா என சென்று வருவீர்கள். சிறப்பான நாட்களாக இருக்கும்.
சகோதர வழியில் உதவி கிடைக்கும். உடல்நலம் சிறப்பாக இருக்கும். செவ்வாயால் மே6க்கு பின் பணவிரயம் ஏற்படலாம்.  

* நல்ல நாள்: ஏப்.16,17,18,19,20,23,24,27,28 மே4,5,6,7,8,14
* கவன நாள்: ஏப்.29,30 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 3,5
* நிறம்: வெள்ளை, பச்சை

* பரிகாரம்:
*   சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகர் வழிபாடு
*   வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு வில்வம்
*   பிரதோஷத்தன்று நந்தீஸ்வரருக்கு நெய் தீபம்

 
மேலும் சித்திரை ராசி பலன் ((14.4.2026 முதல் 14.5.2026 வரை) »
temple news
மேஷம்அசுவினிநேர்மையாக வாழ்ந்துவரும் உங்களுக்கு, பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் மோட்சக்காரகன் கேது, பூர்வ ... மேலும்
 
temple news
ரிஷபம்கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்எடுத்த வேலைகளை முடிப்பதில் உறுதியாக இருக்கும் உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
மிதுனம்மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்திட்டமிட்டு செயல்படுவதில் வல்லவரான உங்களுக்கு, பிறக்கும் சித்திரை ... மேலும்
 
temple news
கடகம்புனர்பூசம் 4 ம் பாதம்எதிலும் தெளிவாக செயல்படக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் சித்திரை மாதம் யோகமான ... மேலும்
 
temple news
சிம்மம்மகம்விடாமுயற்சி செய்பவரான உங்களுக்கு, பிறக்கும் சித்திரை மாதம் வெற்றி தரும் மாதமாக இருக்கும். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar