Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) வளர்ச்சிக்கான மாதம் கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) ... கன்னி: (உத்திரம் 2,3,4 அஸ்தம், சித்திரை 1,2) போட்டியில் வெற்றி கன்னி: (உத்திரம் 2,3,4 அஸ்தம், சித்திரை 1,2) ...
முதல் பக்கம் » வைகாசி ராசிபலன் (15.5.2019 முதல் 15.6.2019 வரை)
சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) பெண்களால் மேன்மை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஏப்
2019
16:47

மனதாலும் தீங்கு செய்யாத சிம்ம ராசி அன்பர்களே!

இந்த மாதம் உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தில் உள்ள குரு, 11-ம் இடத்தில் உள்ள ராகு மாதம் முழுவதும் நற்பலனை கொடுப்பார்கள். 7-ம் இடத்தில் உள்ள சுக்கிரன்  ஏப்.16 க்கு பிறகும், செவ்வாய் மே6க்கு பிறகும் நன்மை செய்வர். புதன் ஏப்.26 வரையும், மே12க்கு பிறகும் சாதகமாக இருந்து நன்மை தருவார்.

ராகுவால் பொன், பொருள் கிடைக்கும். பெண்கள் உறுதுணையாக இருப்பர். செவ்வாய் மே7ல் 11-ம் வீடான சாதகமான மிதுனத்திற்கு வருவது  சிறப்பானது. செயலில் அனுகூலம் ஏற்படும். குரு உங்களுக்கு சாதகமான இடத்தில் இருப்பதால் குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். சுப நிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார்.பொருளாதார வளத்தை அதிகரிக்க செய்வார். பெண்களால் மேன்மை கிடைக்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். மாத முற்பகுதியில் உங்களின் முயற்சிகளில் வெற்றி கிட்டும். புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், பெருமையும் கிடைக்கும்.  சூரியன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் மதிப்பு, மரியாதை எதிர்பார்த்தபடி இருக்காது. அவப்பெயர் வரலாம். வீண் விவாதங்களில் ஈடுபடவேண்டாம்.ஏப்.26 முதல் மே12 வரை பொறுமையுடன் இருக்கவும், விட்டுக் கொடுத்து போகவும்.

குடும்பத்தில் வசதிகள் பெருகும். மகிழ்ச்சி நிலைக்கும். ஏப்.15,16 மே12,13,14ல் பெண்கள் உதவிகரமாக இருப்பர். விருந்து, விழா என சென்று வருவீர்கள். ஏப்.26 முதல் மே12 வரை கணவன், மனைவி இடையே இணக்கமான சூழ்நிலை இருக்காது. சிறு பிரச்னைகள் உருவாகி மறையும்.

பணியாளர்களுக்கு சக பெண் ஊழியர்கள்  ஆதரவுடன் செயல்படுவர். தனியார் துறையில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பர். அவர்கள் தங்கள் கோரிக்கைகளை ஏப்.26க்குள் கேட்டு பெற்று கொள்ளவும். அதன் பிறகு வேலைப்பளுவும், அலைச்சலும் அதிகமாக இருக்கும். வேலையில் பொறுமையும், நிதானமும் தேவை. இருப்பினும் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவற்றுக்கு  தடை இருக்காது. மே6க்கு பிறகு போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் உயர்ந்த நிலையை அடைவர். அதிகாரிகளின் ஆதரவு இருக்கும். மே6,7 சிறப்பான நாட்களாக அமையும்.

தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி உண்டாகும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் முன்னேற்றம் அடையும். ஏப்.26 முதல் மே12 வரை சிலர் தீயோர் சேர்க்கையால் பணத்தை விரயமாக்குவர். ஏப்.14,17,18, மே10,11ல் சந்திரனால் தடைகள் வரலாம். ஏப்.26,27,28ல் எதிர்பாராத வகையில் வருமானம் வரும். 

கலைஞர்களுக்கு பெண்கள் வகையில் இருந்த இடர்பாடுகள் ஏப்.16க்கு பிறகு மறையும். அதன் பின் அதே பெண்கள் தவறை உணர்ந்து உங்களுக்கு உதவிகரமாக இருப்பர். புதிய ஒப்பந்தங்கள்  கையெழுத்தாகும். பணவிஷயத்தில் குறைவிருக்காது. அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் சுமாரான பலன் பெறுவர். மே 6க்கு பிறகு எதிர்பார்த்த பதவி கிடைக்கும்.

மாணவர்கள் சிறப்பான நிலையை அடைவர். போட்டி, பந்தயங்களில் பங்கேற்று வெற்றி காண்பர். ஆசிரியர்கள், சான்றோர்களின் ஆதரவு கிடைக்கும். ஏப்.26 முதல் மே12 வரை நண்பர்களின் விஷயத்தில் விழிப்புடன் இருக்கவும். மேல்படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். சிலர் வெளிநாடு சென்று படிக்கும் வாய்ப்பு கிடைக்க பெறுவர்.

விவசாயிகள் எதிர்பார்த்த மகசூலை பெறலாம். நெல், மஞ்சள், கேழ்வரகு, பழ வகைகள், காய்கறி வகைகள் போன்றவை மூலம் கூடுதல் வருமானத்தை காணலாம். கால்நடை செல்வம் பெருகும். புதிய சொத்து வாங்க நினைப்பவர்களின் எண்ணம் மே6 க்கு பிறகு கைகூடும்.  

பெண்கள் சிறப்பான நிலையில் இருப்பர். பிள்ளைகளால் பெருமை சேரும். குருவால் சுபநிகழ்ச்சிகள் கைகூடும். வேலைக்கு செல்லும் பெண்கள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும் முக்கிய பொறுப்புகளை யாரிடமும் ஒப்படைக்க வேண்டாம். ஏப்.19,20,21ல் புத்தாடை, நகைகள் வாங்கலாம். ஏப்.29,30 சிறப்பான நாட்களாக அமையும். மே6க்கு பிறகு செவ்வாயால் பதவி தேடி வரும். புதிய வீடு, மனை வாகனம் வாங்க யோகம் கூடி வரும்.

* நல்ல நாள்: ஏப்.15,16,19,20,21,26,27,28,29,30, மே 6,7,8,9,12,13,14
* கவன நாள்: மே 1,2,3 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்- 2,7
* நிறம்:மஞ்சள், நீலம்

* பரிகாரம்:
*   ஏகாதசியன்று பெருமாளுக்கு துளசிமாலை
*   சனிக்கிழமையில் அனுமனுக்கு அர்ச்சனை
*   தினமும் காலையில் நீராடி சூரிய தரிசனம்

 
மேலும் வைகாசி ராசிபலன் (15.5.2019 முதல் 15.6.2019 வரை) »
temple
குரு உங்கள் ராசிக்கு 9-ம் இடத்தில் நின்று நன்மை தரப் போகிறார். ஆனால் மே18ல் அவரது அதிசார காலம் முடிந்து ... மேலும்
 
temple
குரு மே18ல் அதிசார காலம் முடிந்து விருச்சிக ராசிக்கு மாறுகிறார். இது மிகவும் உயர்வான நிலை. அப்போது ... மேலும்
 
temple
ராசிக்கு 7 ம் இடத்தில் இருக்கும் குருவால் நற்பலன் மே18 வரை கிடைக்கும். அதன் பிறகு அதிசார காலம் முடிந்து ... மேலும்
 
temple
குருபகவான் மே18ல் அதிசார காலம் முடிந்து விருச்சிக ராசிக்கு மாறுகிறார். இது சாதகமான இடம். அப்போது  அவர் ... மேலும்
 
temple
ராசிக்கு 11-ம் இடத்தில் இணைந்திருக்கும் செவ்வாய், ராகு, 10-ம் இடத்தில் இருக்கும் சூரியன் முன்னேற்றத்தை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.