Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, ... கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) வளர்ச்சிக்கான மாதம் கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) ...
முதல் பக்கம் » புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206)
மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) சூரியனால் சுபயோகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) சூரியனால் சுபயோகம்

பதிவு செய்த நாள்

11 ஏப்
2019
04:04

திட்டமிட்டு பணியாற்றும் மிதுன ராசி அன்பர்களே!

ராசிக்கு 7ம் இடத்தில் இருக்கும் குருவும், 11-ல் சூரியனும் மாதம் முழுவதும் நற்பலன் கொடுப்பர். புதன் ஏப்.26ல் இடம் மாறினாலும் சதகமான பலன் கொடுப்பார். பெண்களின் ஆதரவு இருக்கும். பெண்களால் பொன், பொருள் சேரும். சுக்கிரன் ஏப்.16 வரை 9-ம் இடத்தில் இருப்பதால் பொருளாதார வளம் இருக்கும். சூரியனால் சுபயோகம் உண்டாகும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். அரசு வகையில் அனுகூலம் உண்டாகும்.  

குடும்பத்தில் தேவை அனைத்தும் பூர்த்தியாகும். மனதில் குதூகலம் அதிகரிக்கும். கணவன், மனைவி இடையே அன்பு மேலோங்கும். குருவால் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். புதுமணத்தம்பதிக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். இதனால் வாழ்வில் வளம் காணலாம். செல்வாக்கு மேம்படும். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும்.  எண்ணற்ற ஆடம்பர வசதிகள் கிடைக்கும்.  சகோதரிகளால் மேன்மை உண்டாகும். குறிப்பாக ஏப்.24,25ல் அவர்கள் உதவிகரமாக இருப்பர். விருந்து, விழா என சென்று வருவீர்கள். மே4,5ல் உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். அதே நேரம்  ஏப்.17,18ல் உறவினர் வகையில் மனக்கசப்பு வர வாய்ப்புண்டு. எனவே சற்று விலகி இருக்கவும்.

தனியார் துறையில் பணிபுரிபவர்கள் முன்னேற்றம் காணலாம். பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புண்டு. மேலதிகாரிகளின் கருணை பார்வை கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக செயல்படுவர். அரசு வகையில் எதிர்பார்த்த கடனுதவி எளிதில் கிடைக்கும். அரசு ஊழியர்களுக்கு கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேறும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். இடமாற்ற பீதி மறையும். குரு சாதகமாக இருப்பதால் வேலைப்பளு இருந்தாலும் அதற்கான பலன்கள் கிடைக்காமல் போகாது.  மே1,2,3 சிறப்பான நாட்களாக அமையும். பணியிடத்தில் அதிகாரம் கொடிகட்டி பறக்கும். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம்.

வியாபாரம் செய்பவர்கள் நல்ல வளர்ச்சியைக் காணலாம். புதிய தொழில் அனுகூலத்தை கொடுக்கும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். சுய தொழில் முன்னேற்ற பாதையில் இருக்கும். குருபகவான் பொருளாதார வளத்தை அதிகரிக்கச் செய்வார். சனிபகவானால் அலைச்சல் அதிகரிக்கும் வெளியூர் வாசம் நிகழும்.சிலர் தீயோர் சேர்க்கையால் பணத்தை விரயமாக்குவர்.  ஏப்ரல் 14 மே6,7,10,11ல் சந்திரனால் தடைகள் வரலாம். ஏப்.22,23ல் எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும். மே3க்கு பிறகு. பொருளாதார வளம் மேம்படும். லாபம் அதிகரிக்கும். எடுத்த முயற்சி வெற்றி அடையும்.

கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். வருமானம் படிப்படியாக பெருகும். நடன கலைஞர்கள் சிறப்பான பலன் பெறுவர். புகழ், பாராட்டு கிடைக்கும். ஏப்.16க்கு பிறகு எதிரி தொல்லைகள் அதிகரிக்கும். மறைமுகப்போட்டிகள் அதிகரிக்கும். அவப்பெயர் உருவாகலாம்.  அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் பிரதிபலன் எதிர்பாராமல் பாடுபட வேண்டியிருக்கும். மாணவர்கள் புதன் சாதகமான இடத்தில் உள்ளதால் பிற்போக்கான நிலையில் இருந்து விடுபடுவர். குருவால் கல்வி வளர்ச்சி உண்டாகும். ஆசிரியர்களின் ஆலோசனை வளர்ச்சிக்கு துணைநிற்கும். தேர்வில்  சிறப்பான முடிவு கிடைக்கும். மேல்படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். சிலர் வெளிநாடு சென்று படிக்க வாய்ப்பு கிடைக்கப் பெறுவர்.

விவசாயிகள் போதிய மகசூல் கிடைக்கப் பெறுவர். அதிக முதலீடு செய்ய வேண்டாம் அதிக உழைப்பை சிந்த வேண்டியதிருக்கும். கால்நடை வளர்ப்பின் மூலம் நல்ல வருமானம் கிடைக்கும்.

பெண்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வு நடத்துவர். தடைபட்ட திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். கணவன் மற்றும் குடும்பத்தாரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்கலாம். அக்கம்பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். சுய தொழில் புரியும் பெண்களுக்கு வங்கிக்கடன் எளிதாக கிடைக்கும்.

* நல்ல நாள்: ஏப்.15,16,22,23,24,25,மே1,2,3,4,5,8,9,12,13,14
* கவன நாள்: ஏப். 26,27,28 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்:1,7,9
* நிறம்:சிவப்பு, மஞ்சள்

* பரிகாரம்:
*   வெள்ளியன்று ராகுவுக்கு அர்ச்சனை
*   ஞாயிறன்று பைரவருக்கு நெய்தீபம்
*   சனிக்கிழமையில் சனீஸ்வரர் வழிபாடு

பகிர்க copied
 
மேலும் புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206) »
temple news
அசுவினி: நேர்மையாக வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் நன்மையான மாதமாகும். கேது பூர்வ ... மேலும்
 
temple news
கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்: எப்போதும் முதன்மையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வாழ்ந்து வரும் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: எடுத்த முடிவில் உறுதியாக இருந்து நினைத்ததை சாதித்துவரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: கனிவான குணமும் பிறருக்கு உதவி செய்யும் மனமும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஒவ்வொன்றையும் அனுபவத்தின் வழியாக கற்று முன்னேற்றம் அடைந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar