Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கன்னி: (உத்திரம் 2,3,4 அஸ்தம், சித்திரை 1,2) ... விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், கேட்டை) சுக்கிரனால் சுகவாழ்வு விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், ...
முதல் பக்கம் » புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206)
துலாம்: (சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3) சனீஸ்வரரால் சாதிப்பீங்க!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
துலாம்: (சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3) சனீஸ்வரரால் சாதிப்பீங்க!

பதிவு செய்த நாள்

11 ஏப்
2019
04:04

துணிவால் சாதனை புரியும் துலாம் ராசி அன்பர்களே!

இந்த மாதம் 3-ம் இடத்தில் இணைந்து இருக்கும் சனி, கேது தொடர்ந்து நற்பலன் கொடுப்பர். சுக்கிரன் ஏப்.16 வரையும், புதன் ஏப்.26 வரையும்,மே 25க்கு பிறகும்  சாதகமான இடத்தில் இருக்கிறார்கள். குருவின் அனைத்து பார்வைகளும் சிறப்பாக அமைந்து உள்ளதால் எந்த பிரச்னையையும் முறியடித்து வெற்றிக்கு வழிகாணலாம்.

கேதுவால் பக்தி உயர்வு மேம்படும். சனிபகவானின் பலத்தால் பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.எடுத்த முயற்சி வெற்றி அடையும். சூரியன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் அவ்வப்போது சிற்சில பிரச்னை தலைதூக்கலாம். மதிப்பு, மரியாதை சுமாராகவே இருக்கும். வீண் விவாதத்தை தவிர்க்கவும்.

கடவுளின் கருணை உங்களுக்கு கிடைக்கும். புதிய வீடு, மனை, வாகனம் வாங்கலாம். புதனால் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும்.  பிள்ளைகளால் மகிழ்ச்சியும், பெருமையும் கிடைக்கும். மாதத் தொடக்கத்தில் சுக்கிரனால் பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக செயல்படுவர். ஏப்.19,20,21ல் பெண்களால் நன்மை பெருகும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். ஏப்.15,16,மே12,13,14ல் உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். அதே நேரம் ஏப்.26,27,28ல் உறவினர் வகையில் கருத்துவேறுபாடு வரலாம். எனவே அப்போது சற்று விலகி இருக்கவும்.  ஏப்.26க்கு பிறகு குடும்பத்தில் குழப்பம் நிலவும். மனைவி வகையில் கருத்துவேறுபாடு ஏற்படலாம். பொறுமையுடன் விட்டுக் கொடுத்து போகவும். மே12க்கு பிறகு புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். கணவன்,மனைவி இடையே இணக்கமான சூழ்நிலை இருக்கும்.

பணியாளர்கள் நல்ல வளர்ச்சியைக் காண்பர். சிலருக்கு  பதவி உயர்வு கிடைக்கும். தனியார் துறையில் வேலைபார்ப்பவர்கள்  தங்களின் கோரிக்கைகளை ஏப்ரல் 26க்குள் கேட்டு பெறவும். அதன் பிறகு வேலைப்பளு அதிகரித்தாலும் அதற்குரிய வருமானம் கிடைக்கும். அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சிறப்பான முன்னேற்றத்தைக் காணலாம். புதிய பதவியும் தேடி வரும். ஏப்.14,மே 10,11 சிறப்பான நாட்களாக அமையும்.

தொழில், வியாபாரத்தில் சனி பகவான் தொழில் விருத்தியை தந்து கொண்டிருக்கிறார். லாபம் அதிகரிக்கும். வெளியூர் பயணம் ஏற்படும். கூட்டாளிகளிடையே ஒற்றுமை ஏற்படும்.  ஆன்மிக சம்பந்தப்பட்ட மற்றும் பூஜை பொருட்கள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபம் காண்பர். ஏப்ரல் 17,18,22,23 ல் சந்திரனால் சிறு தடைகள் வரலாம். மே1,2,3ல் எதிர்பாராத வகையில் வருமானம் வரும். ராகுவால் எதிரிகளின் இடையூறு தலைதூக்கலாம். பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகலாம்.

கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். ஏப்.16க்கு பிறகு முயற்சியில் தடையும், மனதில் சோர்வும் ஏற்படும். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் எதிர்பார்த்த பதவி கிடைக்கப் பெறலாம். ஏப்.29,30ல் மனக்குழப்பம் ஏற்படலாம்.
மாணவர்கள் தேர்வில் நல்ல மதிப்பெண் பெறுவர்.  போட்டிகளில் பங்கேற்று வெற்றி காணலாம். ஏப்.26 முதல் மே12 வரை   மெத்தனமாக இருக்க வேண்டாம். சிரத்தை எடுத்து படிப்பது நல்லது.

விவசாயிகளுக்கு மானாவாரி பயிர்களின் மூலம் அதிக மகசூல் கிடைக்கும். கரும்பு, எள், கொள்ளு போன்ற பயிர்களில் நல்ல வருமானம் கிடைக்கும். புதிய சொத்து வாங்க யோகமுண்டு. அதன் பிறகு வழக்கு, விவகாரங்கள் சுமாரான முடிவு கிடைக்கும். பெண்கள் மகிழ்ச்சிகரமாக காணப்படுவர். உங்களால் குடும்பம் பெருமை பெறும். தோழிகள் உதவிகரமாக இருப்பர். தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். குடும்பத்தோடு புனித தலங்களுக்கு செல்வர். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனைப் பெறுவர். ஏப்.26- முதல் மே12 வரை  சிரத்தை எடுத்தே முன்னேற வேண்டியதிருக்கும். மே4,5 சிறப்பான நாட்களாக அமையும். ஏப்.24,25ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம்.

* நல்ல நாள்: ஏப்.14,15,16,19,20,21,24,25 மே 1,2,3,4,5,10,11,12,13,14
* கவன நாள்: மே 6,7 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்-4,7
* நிறம்: சிவப்பு, கறுப்பு

* பரிகாரம்:
*   தினமும் காலையில் சூரிய வழிபாடு
*   செவ்வாயன்று முருகனுக்கு நெய்தீபம்
*   ஏகாதசியன்று பெருமாளுக்கு அர்ச்சனை

பகிர்க copied
 
மேலும் புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206) »
temple news
அசுவினி: நேர்மையாக வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் நன்மையான மாதமாகும். கேது பூர்வ ... மேலும்
 
temple news
கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்: எப்போதும் முதன்மையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வாழ்ந்து வரும் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: எடுத்த முடிவில் உறுதியாக இருந்து நினைத்ததை சாதித்துவரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: கனிவான குணமும் பிறருக்கு உதவி செய்யும் மனமும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஒவ்வொன்றையும் அனுபவத்தின் வழியாக கற்று முன்னேற்றம் அடைந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar