பதிவு செய்த நாள்
29
ஏப்
2019
01:04
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடியில், ஸ்ரீ பக்தஜன கிரியா பாபாஜி சித்தர் பீடத்தின் சார்பில், ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி அம்பாளுக்கு தேய்பிறை அஷ்டமி ஆராதனை நடந்தது. கன்யா பூஜை, திதிநித்யா பூஜை மற்றும் ஹோமங்கள், அபிஷேகங்கள் நடந்தது. மகா சங்கல்பம், வித்யா பாலா ஹோமம், கோ பூஜை, பிரம்மசாரி பூஜை, ஸப்தகன்யா பூஜை, நவதுர்கா பூஜை, வடுக பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை வெங்கடேஸ்வரன், சங்கரநாராயணன், சீனிவாசன் ஆகியோர் செய்தனர்.