அபிராமம் மழை வேண்டி 16 அடி அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07மே 2019 02:05
அபிராமம்:அபிராமம் முருகன் பாத யாத்திரை குழுவினர் சார்பில் உலக அமைதி, நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி யாத்திரை குழுவினர் 16 அடி அலகு வேல் குத்தி, குமர கடவுள் முருகன் தேர் இழுத்தும், காவடி எடுத்தும், பெண்கள் பால்குடங்களை இரவில் ஊர்வலமாக எடுத்துச்சென்று மேளதாளங்கள், செண்டை மேளம் முழங்க ஊர்வலமாக சென்றனர்.
அபிராமத்தில் இருந்து 10 கி.மீ., நடந்து பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். பின் மேலக்கொடுமலூர் குமர கடவுளுக்கு 33 அபிஷேகங்கள், 108 சங்காபிஷேகம், சிறப்பு பூஜை, யாக வேள்வி வழிபாடு செய்தனர்.