பதிவு செய்த நாள்
08
மே
2019
12:05
பெரம்பலுார்: பெரம்பலுார், அகிலாண்டேஸ்வரி உடனுறை பிரம்மபுரீஸ்வரர் கோவிலில், மழை வேண்டி ருத்ர ஜப பூஜை நடந்தது.
இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பெரம்பலுார் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள, அகிலாண்டேஸ்வரி உடனுறை பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் மழை வேண்டி, ருத்ர ஜப பூஜை மற்றும் நந்தியம்பெருமானுக்கு வருண ஜப பூஜை ஆகியவை நேற்று நடந்தது.கணபதி பூஜை, புண்ணியாவசனம், சங்கல்பம் மற்றும் ருத்ர ஜப வேள்வியும், அதையடுத்து யாகசாலை பூஜையும், மஹா பூர்ணாஹுதியும் நடைபெற்றன. இதையடுத்து, தீர்த்த கலசங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, பிரம்மபுரீஸ்வரர், அகிலாண்டேஸ்வரிக்கு, பல்வேறு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது. மேலும், நந்தியம்பெருமானுக்கு தொட்டி அமைத்து, முழுவதும் தண்ணீர் நிரப்பப்பட்டு, வருண ஜப பூஜை நடைபெற்றது. இப்பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.