உடுமலை:உடுமலை பிராமண சேவா சமிதி மற்றும் ராமய்யர் திருமண மண்டப அறக்கட்டளை சார்பில், சங்கர ஜெயந்தி மற்றும் ராமானுஜ ஜெயந்தி விழா நடந்தது. ராமய்யர் திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில், காலை, 8:00 மணி முதல் 11:00 மணி வரை, சங்கர ஜெயந்தி மற்றும் ராமானுஜர் ஜெயந்தி சிறப்பு பூஜை நடந்தது. ரிக், யஜூர், சாம, அதர்வண வேத பாராயணங்கள் நடந்தது. பிராமண சேவா சமிதி யினர் உட்பட பலர் பங்கேற்றனர்.