பதிவு செய்த நாள்
11
மே
2019
03:05
போத்தனூர்: குறிச்சி ஹவுசிங் யூனிட் பகுதியிலுள்ள தர்ம சாஸ்தா கோவில், 23ம் ஆண்டு விழா நேற்று (மே., 10ல்) நிறைவடைந்தது.சுந்தராபுரத்தை அடுத்து குறிச்சி ஹவுசிங்
யூனிட்டிலுள்ள தர்ம சாஸ்தா கோவிலின், 23ம் ஆண்டு விழா, 5ல் அலங்கார தரிசனத்துடன் துவங்கியது. தொடர்ந்து வந்த நாட்களில் பல்வேறு பூஜைகள் மற்றும் வழிபாடுகள்
நடந்தன.
இறுதி நாளான, நேற்று (மே., 10ல்) காலை முதல் பள்ளி குறுப்பு உணர்த்துதல், திருக்கனி தரிசனம், முளை எடுத்தல், மகா கணபதி ஹோமம், சிறப்பு அபிஷேகம், உஷ பூஜை, தீபாராதனை, சாந்தி ஹோமம், மகா அன்னதானம் உள்ளிட்டவை நடந்தன.மாலையில், அலங்கரிக்கப்பட்ட யானையில் ஐயப்பன் ஊர்வலம் நடந்தது. திரளானோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை, கோவில் கமிட்டி தலைவர் ராஜேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.