திருவாடானை : திருவாடானை அருகே அஞ்சுகோட்டை கிராமத்தில் உள்ள ஜகத்ஜனனி அம்மன் கோயில் விழா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அஞ்சுகோட்டை, கரையக்கோட்டை, சுப்பிரமணியபுரம் போன்ற பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.அன்னதானம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. விழாவை முன்னிட்டு கோயில் வண்ணமின் விளக்குகளால் அலங்கரிக்கபட்டிருந்தது.