Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பெரியகோவிலில் குவியும் ... கருட சேவையில் காஞ்சி வரதர் உலா கருட சேவையில் காஞ்சி வரதர் உலா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கேதார்நாத் குகைக்குள் 17 மணி நேரம் மோடி தியானம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கேதார்நாத் குகைக்குள் 17 மணி நேரம் மோடி தியானம்

பதிவு செய்த நாள்

20 மே
2019
10:05

கேதார்நாத்: கேதார்நாத் கோவிலில், நாட்டு மக்களின் நலனுக்காக கடவுளிடம் வேண்டினேன். தேர்தல் நடத்தை விதிமுறை கள் அமலில் உள்ள நிலையில், கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் கோவில்களில் வழிபாடு நடத்த, அனுமதி அளித்த, தேர்தல் ஆணையத் துக்கு நன்றி, என, பிரதமர் நரேந்திர மோடி, நெகிழ்ச்சியுடன் கூறினார்.

பரபரப்பு: லோக்சபா தேர்தலுக்கான பிரசாரம் முடிவடைந்த நிலையில், கடைசி கட்ட ஓட்டுப் பதிவு, நேற்று நடந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம், உத்தரகண்ட் மாநிலம், கேதார்நாத்தில் உள்ள பழமையான சிவன் கோவிலுக்கு, பிரதமர் மோடி வந்தார். இமயமலை அடிவாரத்தில், கடல் மட்டத்தில் இருந்து, 11 ஆயிரத்து, 755 அடி உயரத்தில் உள்ள இந்த கோவிலுக்கு, கோடை காலத்தில் மட்டுமே,பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுவர். இந்தாண்டு, சமீபத்தில், கோவில் நடை திறக்கப்பட்டதை அடுத்து, பிரதமர் மோடி வருகை தந்தது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. கேதார்நாத் கோவிலில் வழிபாடு நடத்திய மோடி, காவி உடையணிந்து, அங்குள்ள குகையில், நேற்று முன் தினம் தியானத்தில் அமர்ந்தார். 17 மணி நேரம், இந்த குகையில், அவர் தியானம் செய்தார்.

பக்தர்கள் தியானம் செய்வதற்காக, இது போன்ற குகைகள் கேதார்நாத்தில் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த குகையில், ஒருவர், அதிகபட்சமாக, மூன்று நாட்கள் தங்கலாம். ஒரு நாளைக்கு, 990 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இங்கு, மூன்று வேளை உணவு, படுக்கை, உதவியாளர் உள்ளிட்ட வசதி செய்து தரப்படும்.

குகையில் தியானத்தை முடித்த பிரதமர், நேற்று, கோவில் அதிகாரிகளை சந்தித்து, அங்கு நடந்து வரும் சீரமைப்பு பணிகள், வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார். பின், கோவிலுக்கு வெளியில் நின்றிருந்த பொதுமக்களை பார்த்து, கையசைத்தார்.இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம், அவர் கூறியதாவது: கேதார் நாத்துக்கு, நான் வருவது, இது முதல் முறையல்ல; பல முறை வந்துள்ளேன். இங்கு வந்தது, எனக்கு கிடைத்த வரம். இதை, பேரதிர்ஷ்டமாக கருதுகிறேன். நன்றி

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தேனி: புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் நடந்த ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளின் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் ஆறாம் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி ஐந்தாம் சனிக் கிழமையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் ... மேலும்
 
temple news
கோவை: புரட்டாசி ஐந்தாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை பீளமேடு அஷ்டாம்ச ஸ்ரீ வரத ஆஞ்சநேயருக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar