பதிவு செய்த நாள்
07
ஜூன்
2019
11:06
பழநி:பழநி அருகே கோதைமங்கலம் பெரியாவுடையார்கோயிலில் வருடாபிஷேகத்தை முன்னிட்டு, 108 சங்காபிஷேகம், யாகபூஜை நடந்தது.
பழநி முருகன் கோயிலைச் சார்ந்த, சண்முகா நதிக்கரையில்அமைந்துள்ள பெரியாவுடையார் கோயில் மிகப்பழமைவாய்ந்தது. இக்கோயிலில் நேற்று (ஜூன்., 6ல்) வருடாபிஷேகத்தை முன்னிட்டு, அமிர்தலிங்கம் குருக்கள், செல்வம் குருக்கள் குழுவினர் மூலம் புனித கும்ப கலசங்கள், 108 சங்குகளில் புனிதநீர் நிரப்பியும், யாகபூஜை நடந்தது.
உச்சிகாலபூஜையில் பெரியாவுடையாருக்கு சங்காபிஷேகம் செய்து, அலங்காரம், பூஜை நடந்தது. ரிஷப வாகனத்தில் சிவன், பார்வதி உட்பிரகாரத்தை வலம்வந்தனர். இணை ஆணையர் செல்வராஜ், கண்காணிப்பாளர் முருகேசன், கந்தவிலாஸ் உரிமையாளர் செல்வக்குமார் மற்றும் பக்தர்கள் பலர் பங்கேற்றனர்.