பதிவு செய்த நாள்
07
ஜூன்
2019
11:06
திருப்பூர்:திருப்பூர் ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவிலில், ஸ்ரீமத் பாகவத ஸப்தாக ஞானவேள்வி விழா நேற்று (ஜூன்., 6ல்)துவங்கியது.இதில், மதுரை அழகர் கோவில் கோமடம் சுவாமி
பேசியதாவது:தர்மப்படி வாழ்வதே நன்மை பயக்கும்; தர்மவழியில் சென்றால் மட்டுமே, இறைவனை சென்றடைய முடியும். அனைவரின் மனசாட்சியாக, கிருஷ்ணர் வாழ்ந்து
கொண்டிருக்கிறார்.
கர்மாவின் தொடர்ச்சியாகவே பிறப்பு நிகழ்வதால், பிறப்பில் ஏற்றத்தாழ்வு இருக்கிறது.எவ்வித ஏற்றத்தாழ்வு வந்தாலும், இறைவனை நினைத்து வாழ்ந்தால், திருவடி நிழலை அடையலாம். தர்மப்படி வாழ்பவர்களை கண்டு பகவான் மகிழ்வார்; பரம்பொருளான கிருஷ்ணர் மகிழ்ந்தால், அனைத்து வளமும் பெருகும். பக்தியை வளர்க்க, முதுமை வரை காத்திருக்க கூடாது; குழந்தை பருவத்தில் இருந்தே, பக்தியை வளர்க்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.