சிதம்பரம்: சிதம்பரத்தில், தமிழ்நாடு விஸ்வகர்மா முன்னேற்ற சங்கத்தின் கூட்டம் நடந்தது.காமாட்சியம்மன் கோவில் வளாகத்தில் நடந்த கூட்டத்திற்கு சங்க மாநில தலைவர் சேகர் தலைமை தாங்கினார்.
சங்க நிர்வாகிகள் கோவிந்தராஜ்,கலியமூர்த்தி, அரங்கநாதன் முன்னிலை வகித்தனர். சங்க செயலாளர் முத்துக்குமார் வரவேற்றார்.சிதம்பரம் பாரத ஸ்டேட் வங்கியின் கிளை முதன்மை மேலாளர் ஸ்ரீராமன், முத்ரா திட்டம் மற்றும் வங்கி கடன் குறித்து பேசினார். வங்கியின் துணை மேலாளர் முரளி, கள அலுவலர் அருண் ஆகியோர் முத்ரா திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து பேசினார்.சங்க நிர்வாகிகள் ரமேஷ், பாலசுப்பரமணியன், சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நகர பொருளாளர் ராஜ்குமார் நன்றி கூறினார்.