Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

கன்னி: (உத்திரம் 2,3,4 அஸ்தம், சித்திரை 1, 2) சூரியனால் சுகவாழ்வு கன்னி: (உத்திரம் 2,3,4 அஸ்தம், சித்திரை 1, 2) ... விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், கேட்டை) குருபார்வையால் யோகம் விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், ...
முதல் பக்கம் » மார்கழி ராசிபலன் (17.12.2019 முதல் 14.1.2020 வரை)
துலாம்: (சித்திரை 3,4 சுவாதி, விசாகம் 1,2,3) சுபநிகழ்ச்சி நடந்தேறும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2019
13:42

இந்த மாதம் சனி, கேது 3-ம் இடத்தில் இணைந்து நின்று நன்மை தருவார்கள். சுக்கிரன் ஜூன் 29ல் ரிஷபத்தில் இருந்து மிதுனத்திற்கு மாறினாலும் மாதம் முழுவதும் நன்மை தருவார். குருபகவான் 2-ம் இடத்தில் இருக்கிறார். இது சிறப்பான அம்சம்.  அவரால் பிரச்னை அனைத்தும் இருக்குமிடம் தெரியாமல் மறையும். குடும்பத்தில் நிலவிய குழப்பத்திற்கு தீர்வு கிடைக்கும்.மந்த நிலை மாறும். மனதில் துணிச்சல் பிறக்கும். பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடந்தேறும். பகைவர் சதி உங்களிடம் எடுபடாது. அவர்கள் சரணடையும் நிலை ஏற்படும்.

கேதுவின் பலத்தால் மனதில் பக்தி எண்ணம் மேம்படும். முயற்சி அனைத்திலும் வெற்றி காணலாம். பொருளாதார வளம் சிறக்கும். ஆடை, ஆபரணம் வாங்கலாம். புதன், சூரியன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் சமூக மதிப்பு எதிர்பார்த்தபடி இருக்காது. சிலர் பொல்லாப்பை சந்திக்க நேரிடலாம். பொறுமையுடன் விட்டுக் கொடுத்து போகவும்.

குடும்பத்தில் வசதி, வாய்ப்புகள் பெருகும். மனதில் மகிழ்ச்சி நிலவும். பெண்கள் உதவிகரமாக செயல்படுவர். குறிப்பாக ஜூலை 10,11,12ல் அவர்களால் நன்மை கிடைக்கும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். ஜூன் 20,21ல் உறவினர் வகையில் சற்று ஒதுங்கி இருக்கவும். ஆனால் ஜூலை6,7ல் உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். செவ்வாயால் ஜூன் 24க்கு பிறகு சிலரது வீட்டில் களவு போக வாய்ப்புண்டு. கவனம் தேவை.

பணியாளர்கள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். எதிர்பார்த்த பதவி உயர்வு  கிடைக்காது. ஆனால் குரு சாதகமாக இருப்பதால் பிற்போக்கான நிலை ஏற்படாது. வழக்கமாக கிடைக்க வேண்டிய சம்பளஉயர்வு, பதவிஉயர்வுக்கு தடையிருக்காது. சகபெண் ஊழியர்கள் ஆதரவுடன் செயல்படுவர். பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சிறப்பான முன்னேற்றத்தைக் காணலாம். ஜூலை4,5ல் எதிர்பார்ப்பு நிறைவேறும். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம்.

தொழில், வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியைக் காணலாம். ஆன்மிக சம்பந்தமான பூஜை பொருட்கள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர். பெண்களை பங்குதாரராக கொண்ட தொழில் வளர்ச்சி அடையும். பகைவர்களின் இடையூறுகளை உடைத்தெறிவீர்கள். புதிய வியாபாரத்தில் ஓரளவு அனுகூலம் உண்டாகும். ஜூன்16,17, ஜூலை 8,9,13,14ல் சந்திரனால் தடைகள் வரலாம். ஜூன்25,26ல் எதிர்பாராத வகையில் பணம் கிடைக்கும். புதனால் சிலர் தீயோர் சேர்க்கையால் பணத்தை விரயமாக்குவர். எனவே யாரிடமும் எச்சரிக்கையுடன் பழகவும்.

கலைஞர்களுக்கு  புகழ், பாராட்டு கிடைக்கும்.  புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது. அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் சீரான பலனைக் காண்பர்.அதிக முயற்சி எடுத்தால் மட்டுமே பதவி கிடைக்கும். ஜூன் 22,23,24ல் மனக்குழப்பம் ஏற்படலாம்.

மாணவர்களுக்கு புதன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் சிலர் தீயவர்களுடன் நட்பு கொள்ள வாய்ப்புண்டு. கவனம் தேவை  குருவால் ஆசிரியர்கள், ஆன்றோர்களின் ஆதரவு கிடைக்கும். போட்டியில் பங்கேற்று வெற்றி காண்பர். கல்வியில் சிறப்பான வளர்ச்சி நிலை காண்பர். தேர்வில் நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும்.  

விவசாயிகள் எள், கரும்பு, மஞ்சள், கேழ்வரகு, சோளம் போன்றவை மூலம் நல்ல வருமானத்தைக் காணலாம். கால்நடை வகையில் எதிர்பார்த்த பலன் கிடைக்க வாய்ப்பில்லை. வழக்கு விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம்.

பெண்களால் குடும்ப வாழ்வு சிறப்படையும். அன்றாட வாழ்வில் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். குடும்பத்தோடு புனித ஸ்தலங்களுக்கு சென்று மகிழ்வீர்கள். வேலைக்கு செல்லும் பெண்கள் அதிக பளுவை சுமக்க வேண்டியதிருக்கும். பணிபுரியும் பெண்களுக்கு  புதிய பதவி தேடி வரும்.

ஜூன்18,19, ஜூலை15,16ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம்.பெற்றோர் வீட்டில் இருந்து பொருட்கள் வரப் பெறலாம். ஜூன் 27,28,29 ஆகியவை சிறப்பான நாட்களாக அமையும். சகோதரிகளால் பணஉதவி கிடைக்கும். செவ்வாயால் உஷ்ணம் தொடர்பான பிரச்னைகள் ஏற்படலாம்.

* நல்ல நாள்: ஜூன்18,19,25,26,27,28,29,
* ஜூலை 4,5,8,9,10,11,12,15,16
* கவன நாள்: ஜூன்30, ஜூலை1   
* அதிர்ஷ்ட எண்: 2,8
* நிறம்: வெள்ளை, மஞ்சள்

பரிகாரம்
●  தினமும் காலையில் நீராடி சூரிய நமஸ்காரம்
●  அஷ்டமியன்று பைரவருக்கு அரளி மாலை
●  சுவாதியன்று நரசிம்மருக்கு நெய்தீபம்

 
மேலும் மார்கழி ராசிபலன் (17.12.2019 முதல் 14.1.2020 வரை) »
temple
நல்ல மனம் படைத்த மேஷ ராசி அன்பர்களே!

இந்த மாத தொடக்கத்தில் முயற்சியில் வெற்றி கிடைக்கும். பொன், ... மேலும்
 
temple
உற்சாக மனப்பான்மை கொண்ட ரிஷப ராசி அன்பர்களே!

இந்த மாதம் முக்கிய கிரகங்களில் 8ல் இருக்கும் ... மேலும்
 
temple
மதிநுட்பம் கொண்ட மிதுன ராசி அன்பர்களே!

இந்த மாதம் புதன் டிச.21 வரை உங்கள் ராசிக்கு 6ம் இடமான ... மேலும்
 
temple
கடமை உணர்வு மிக்க கடக ராசி அன்பர்களே!

கடந்த மாதத்தை விட நன்மை அதிகம் கிடைக்க வாய்ப்புண்டு. ... மேலும்
 
temple
புதுமை எண்ணம் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே!

இந்த மாதம் முக்கிய கிரகங்களில் 11ல் இருக்கும் ராகுவால் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.