Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) சிறப்பான மாதம் சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) ... துலாம்: (சித்திரை 3,4 சுவாதி, விசாகம் 1,2,3) சுபநிகழ்ச்சி நடந்தேறும் துலாம்: (சித்திரை 3,4 சுவாதி, விசாகம் 1,2,3) ...
முதல் பக்கம் » மார்கழி ராசிபலன் (17.12.2019 முதல் 14.1.2020 வரை)
கன்னி: (உத்திரம் 2,3,4 அஸ்தம், சித்திரை 1, 2) சூரியனால் சுகவாழ்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2019
13:20

முக்கிய கிரகங்களில் 10ம் இடத்தில் இருக்கும் சூரியன், புதன் மாதம் முழுவதும் நன்மை தருவார்கள். மேலும் செவ்வாய் ஜூன் 24ல் மிதுனத்தில் இருந்து கடகத்திற்கு மாறி நன்மை தருவார். குருபகவான் இப்போது உங்கள் ராசிக்கு 3ம் இடத்தில் இருப்பது சுமாரான நிலையே. அவரால் முயற்சியில் தடை ஏற்படும்.

சூரியன் சாதகமாக காணப்படுபவதால் சுகமான வாழ்வு அமையும்.  பொருளாதார வளம் சிறக்கும். எந்த ஒரு காரியத்தையும் வெற்றிகரமாக முடிக்கலாம். பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும்.  செவ்வாயால் ஏற்பட்ட திருட்டு, களவு பயம் ஜூன் 24க்கு பிறகு நீங்கும். அதன் பிறகு புதிய வீடு, மனை,வாகனம் வாங்க யோகம் கூடி வரும்.

குடும்பத்தில் பெண்களுக்கு சாதகமான திசையில் காற்று வீசுவதால் முக்கிய பொறுப்புகளை அவர்களிடம் ஒப்படையுங்கள். பொன், பொருள் சேரும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் கைகூடும். ஜூலை8,9ல் சகோதரிகள் ஆதரவுடன் இருப்பர். அவர்களால் பணஉதவி கிடைக்கும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். ஜூலை 4,5ல் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆனால் ஜூன் 18,19,ஜூலை15,16ல் உறவினர் வகையில் மனக்கசப்பு வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும்.

பணியாளர்களுக்கு பணியிடத்தில் நற்பெயரும், மதிப்பும் ஏற்படும். வேலையில் திருப்தியான நிலையைக் காண்பர். மேலதிகாரிகளின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். சிலருக்கு விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கலாம். சகபெண் ஊழியர்கள் ஆதரவுடன் செயல்படுவர்.

வேலையின்றி இருக்கும் படித்தவர்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்க வாய்ப்புண்டு. ஜூலை2,3ல் எதிலும் வெற்றி காணலாம். பணியிடத்தில் அதிகாரம் கொடிகட்டி பறக்கும். ஜூன் 24க்கு பிறகு பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பர். புதிய பதவியும் தேடி வரும்..

வியாபாரிகளுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். புதிய தொழில் அனுகூலத்தைக் கொடுக்கும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் முன்னேற்றம் அடையும். பங்கு வர்த்தகம் நல்ல லாபத்தை தரும். நண்பர்கள் தக்க சமயத்தில் உதவ முன்வருவர்.  குறைந்த முதலீட்டில் புதிய தொழில் தொடங்கலாம். ஜூன் 22,23,24ல் எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும். ஜூலை 6,7,10,11,12ல் சந்திரனால் தடைகள் வரலாம்.

கலைஞர்கள் முன்னேற்றமான பலனைக் காணலாம். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். சுக்கிரன் இடம் மாறுவதால் ஜூன் 29க்கு பிறகு புதிய ஒப்பந்தம் பெறுவதில் தடைகளை சந்திக்க நேரிடும். எதிரிகள் தொல்லை, மறைமுகப்போட்டி குறுக்கிடலாம்.  

சமூகநல சேவகர்கள், அரசியல்வாதிகள் சிறப்பான நிலையில் இருப்பர். ஜூன் 20,21ல் மனக்குழப்பம் ஏற்படலாம். ஜூன் 24க்கு பிறகு மக்கள் மத்தியில் செல்வாக்கு உயரும்.

மாணவர்கள் நல்ல வளர்ச்சி காண்பர். பாடத்தில் மட்டுமின்றி விளையாட்டு போட்டிகளிலும் வெற்றி காண்பர். புதன் சாதகமான இடத்தில் இருப்பதால் கூடுதல் நன்மையை எதிர்பார்க்கலாம்.

விவசாயிகளுக்கு வருமானம் அதிகரிக்கும். பாசிப்பயறு, நெல், சோளம், தக்காளி, பழவகைகள் மூலம் நல்ல வருவாய் கிடைக்கும். கால்நடை வளர்ப்பின் மூலம் ஆதாயம் அதிகரிக்கும். ஜூன்24க்கு பிறகு புதிய சொத்து வாங்க யோகமுண்டு. பக்கத்து நிலத்தால் ஏற்பட்ட பிரச்னை மறையும். வழக்கு,விவகாரங்களில் சாதகமான முடிவு கிடைக்கும்.

பெண்களால் குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. கணவரின் அன்புக்குரியவராக திகழ்வர். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை எதிர்பார்க்கலாம். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும்.

சுயதொழில் செய்யும் பெண்களுக்கு பொருளாதார வளம் பெருகும். தொழிலில் லாபம் குறையாது. ஜூன்16,17, ஜூலை13,14ல் ஆடை, அணிகலன்கள் வாங்கலாம்.  ஜூன் 25,26ல் சிறப்பான பலனை காணலாம்.உடல்நிலை சீராக இருக்கும். செவ்வாயால் ஏற்பட்ட உஷ்ணம், தோல், தொடர்பான நோய்கள் ஜூன் 24க்கு பிறகு பூரண குணம் பெறும்.

* நல்ல நாள்: ஜூன் 16,17,22,23,24,25,26, ஜூலை 2,3,4,5,8,9,13,14
* கவன நாள்: ஜூன் 27,28,29 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 5,6
* நிறம்: சிவப்பு,பச்சை

பரிகாரம்
●  வியாழனன்று தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை
●  சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகர் வழிபாடு
●  பவுர்ணமியன்று அம்மன் கோயில் தரிசனம்.

 
மேலும் மார்கழி ராசிபலன் (17.12.2019 முதல் 14.1.2020 வரை) »
temple
நல்ல மனம் படைத்த மேஷ ராசி அன்பர்களே!

இந்த மாத தொடக்கத்தில் முயற்சியில் வெற்றி கிடைக்கும். பொன், ... மேலும்
 
temple
உற்சாக மனப்பான்மை கொண்ட ரிஷப ராசி அன்பர்களே!

இந்த மாதம் முக்கிய கிரகங்களில் 8ல் இருக்கும் ... மேலும்
 
temple
மதிநுட்பம் கொண்ட மிதுன ராசி அன்பர்களே!

இந்த மாதம் புதன் டிச.21 வரை உங்கள் ராசிக்கு 6ம் இடமான ... மேலும்
 
temple
கடமை உணர்வு மிக்க கடக ராசி அன்பர்களே!

கடந்த மாதத்தை விட நன்மை அதிகம் கிடைக்க வாய்ப்புண்டு. ... மேலும்
 
temple
புதுமை எண்ணம் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே!

இந்த மாதம் முக்கிய கிரகங்களில் 11ல் இருக்கும் ராகுவால் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.