பதிவு செய்த நாள்
13
ஜூன்
2019
02:06
இந்த மாதம் குரு, ராகு சாதகமாக இருந்து சிறப்பான பலனைத் தருவர். சூரியன், புதன் இணைந்திருந்து நன்மையளிப்பர். செவ்வாய் ஜூன்24 வரையும், சுக்கிரன் ஜூன்29 வரையும் சுபபலன் அளிக்க காத்திருக்கின்றனர். உங்களுக்கு அபார ஆற்றல் பிறக்கும். ஆடை, ஆபரணங்கள் வாங்கலாம்.
குருபகவான் 11-ம் இடத்தில் இருக்கிறார். இது சிறப்பான இடம் ஆகும். முயற்சியில் வெற்றியளித்து பொருளாதாரத்தில் முன்னேற்றம் காணச் செய்வார்.
குடும்பத்தில் புதனால் நினைத்தது நிறைவேறும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் சிறப்பாக நடக்கும். மாத முற்பகுதியில் சுக்கிரனால் பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக செயல்படுவர். மனதில் பக்தி எண்ணம் மேம்படும். புதிய வீடு, மனை, வாகனம் வாங்க யோகமுண்டு. ஜூன் 20,21ல் பெண்களால் கூடுதல் நன்மை கிடைக்கும். ஜூன்16,17, ஜூலை13,14ல் உறவினர்கள் வருகையும், அவர்களால் நன்மையும் ஏற்படும். ஜூன் 27,28,29ல் அவர்கள் வகையில் பிரச்னை வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். ஜூன்24க்கு பிறகு செவ்வாயால் மனைவி வகையில் தொல்லை வரலாம். ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போகவும். அக்கம் பக்கத்தினரால் பிரச்னை வரலாம்.
பணியாளர்களுக்கு பணியிடத்தில் மதிப்பு அதிகரிக்கும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். சிலர் புதிய பதவி கிடைக்க பெறுவர். போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் உயர்ந்த நிலையை அடைவர். ஜூன் 24க்கு பிறகு செவ்வாய் 7ம் இடத்தில் இருப்பதால் வேலைப்பளு அதிகரிக்கும். சிலர் வேலை விஷயமாக குடும்பத்தை விட்டு பிரிந்து செல்ல நேரிடலாம். ஜூலை 10,11,12ல் சிறப்பான பலனை எதிர்பார்க்கலாம். பணியிடத்தில் அதிகாரம் கொடிகட்டி பறக்கும்.
தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். புதிய தொழில் முயற்சி அனுகூலத்தை கொடுக்கும். வாடிக்கையாளர் மத்தியில் நற்பெயர் கிடைக்கும். ஆன்மிக சம்பந்தப்பட்ட மற்றும் பூஜை பொருள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர். ராகுவால் பகைவர்களின் சதியை முறியடிக்கும் வல்லமை உண்டாகும். கொடுக்கல், வாங்கல் சிறப்பாக இருக்கும்.
கூட்டாளிகளிடையே ஒற்றுமை ஏற்படும். ஜூலை2,3ல் எதிர்பாராத வகையில் பணவரவுக்கு வாய்ப்பு இருக்கிறது. ஜூன் 18,19,22,23,24, ஜூலை15,16ல் சந்திரனால் தடைகள் வரலாம்.
கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். ஜூன் 29க்கு பிறகு முயற்சியில் தடையும், மனதில் சோர்வும் ஏற்படும். சக பெண் கலைஞர்களால் உதவி கிடைக்கும்.
அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் சீரான நிலையில் இருப்பர். ஜூன்24க்கு பிறகு வீண்அலைச்சல் ஏற்படும். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். ஜூன்30, ஜூலை1ல் மன உளைச்சலுக்கு ஆளாகலாம்.
மாணவர்களுக்கு புதன் சாதகமாக காணப்படுவதால் நற்பெயர் கிடைக்கும். ஆசிரியரின் ஆலோசனை நன்மைக்கு வழிவகுக்கும். தேர்வில் நல்ல மதிப்பெண்கள், போட்டிகளில் வெற்றி கிடைக்கும். மேல்படிப்பில் விரும்பிய பாடப்பிரிவில் சேர இடம் கிடைக்கும். சிலர் அயல்நாடு சென்று படிக்க யோகமுண்டு.
விவசாயிகள் சிறப்பான முன்னேற்றத்தைக் காணலாம். எதிர்பார்த்ததை விட கூடுதல் வருமானமும் கிடைக்கும். மானாவாரிப் பயிர்கள், நெல், மஞ்சள், பழவகைகள், சோளம், கேழ்வரகு, தக்காளி போன்ற பயிர்கள் மூலம் அதிக ஆதாயம் வரும். கால்நடை மூலம் நல்ல வருமானம் காணலாம். புதிய சொத்து வாங்கும் எண்ணம் கைகூடும். வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
பெண்களுக்கு குடும்ப வாழ்வு சிறக்கும். குடும்பத்தோடு புனித தலங்களுக்கு சென்று வருவீர்கள். தடைபட்ட சுபநிகழ்ச்சிகள் கைகூடும். புதுமணத் தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர்.
ஜூன் 25,26 சிறப்பான நாட்களாக அமையும். பிறந்த வீட்டில் இருந்து பொருட்கள் கிடைக்கப் பெறலாம். ஜூலை4,5ல் விருந்து விழா என சென்று வருவீர்கள். சகோதரிகள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.
ஜூன்24 க்கு பிறகு பிறரது உதவியை நாடாமல் தன் கையே தனக்கு உதவி என்ற எண்ணத்தில் உழைத்து முன்னேறுங்கள். உடல்நிலை மேம்படும்.
* நல்ல நாள்: ஜூன் 16,17,20,21,25,26, ஜூலை 2,3,4,5,10,11,12,13,14
* கவன நாள்: ஜூலை 6,7 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்:1,7,9
* நிறம்: பச்சை,மஞ்சள்
பரிகாரம்:● சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு அர்ச்சனை
● வெள்ளியன்று ராகுகால துர்கை வழிபாடு
● ஏகாதசியன்று பெருமாளுக்கு துளசிமாலை