Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், கேட்டை) குருபார்வையால் யோகம் விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், ... மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2) வீடு வாகன சேர்க்கை மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், ...
முதல் பக்கம் » கார்த்திகை ராசிபலன் (17.11.2019 முதல் 16.12.2019 வரை)
தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) சனியால் வெளியூர் பயணம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2019
13:59

இந்த மாதம் சந்திரனால் பெரும்பாலான நாட்கள் நன்மை உண்டாகும். மற்ற கிரகங்கள் திருப்தியற்ற நிலையில் இருப்பதால் முக்கிய முடிவுகளை தீர சிந்தித்த பிறகே செயல்படுத்த வேண்டும். எந்த ஒரு செயலையும் சற்று முயற்சி எடுத்தே முடிக்க வேண்டியதிருக்கும். ஆனால் சனியின் 3-ம் இடத்துப்பார்வையால் பிரச்னைகளை முறியடித்து வெற்றிக்கு வழி காணலாம். சனிபகவான் பொருளாதார வளத்தையும் குடும்பத்தில் மகிழ்ச்சியையும் தொழில் விருத்தியையும் தருவார்.

குருபகவான் இப்போது உங்கள் ராசிக்கு 12ம் இடத்தில் இருக்கிறார். இது சுமாரான நிலையே. இங்கு அவரால் பொருள் விரயம், வீண் அலைச்சல் ஏற்படலாம். சூரியனாலும், செவ்வாயாலும் தடைகள் வரலாம். அலைச்சல் அதிகரிக்கும். புதன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் குடும்பத்தில் குழப்பம் நிலவும். மனைவி வகையில் கருத்து வேறுபாடு ஏற்படலாம்.  

கணவன், மனைவி இடையே அவ்வப்போது சண்டை, சச்சரவு வரலாம். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும். ஜூன் 18,19, ஜூலை15,16ல் பெண்களால் நன்மை ஏற்படும். அவர்களால் பண உதவி கிடைக்கும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். ஜூன் 25,26ல் உறவினர்கள் வகையில் மனக்கசப்பு வரலாம். சற்று விலகி இருக்கவும். அதே நேரம் ஜூலை10,11,12ல் உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும்.

பணியாளர்களுக்கு பணிச்சுமை அதிகம் என்பதால் வேலையில் பொறுமையும், நிதானமும் தேவை. ஆனால் அதற்குரிய வருமானம் கிடைக்கும். மேலதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். பணி விஷயமாக வெளியூரில் தங்கும் நிலை ஏற்படலாம். முயற்சி எடுத்தால் மட்டுமே கோரிக்கைகள் நிறைவேறும். ஜூலை 8,9ல் அலுவலக ரீதியாக முன்னேற்றமான சம்பவம் நடக்கும். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம்.

தொழில், வியாபாரத்தில் முதலீட்டை அதிகப்படுத்த வேண்டாம். பகைவர்களின் தொல்லை அதிகரிக்கும். ஜூன்30, ஜூலை1ல் எதிர்பாராத வகையில் ஆதாயம் கிடைக்க வாய்ப்புண்டு. பகைவரை எதிர்த்து வெற்றி கொள்ளும் ஆற்றல் உண்டாகும். ஜூன்16,17,20,21 ஜூலை13,14ல் சந்திரனால் தடைகளை சந்திக்க வேண்டியதிருக்கும். ராகுவால் அலைச்சல் அதிகரிக்கும். சிலர் தரம் தாழ்ந்த பெண்ணின் சேர்க்கையால் அவப்பெயர், பணஇழப்பை சந்திக்க நேரலாம்.

கலைஞர்களுக்கு முயற்சியில் இருந்த தடையும், மனதில் ஏற்பட்ட சோர்வும் ஜூன் 29க்கு பிறகு மறையும். ஆனால் அதன் பிறகு பெண்கள் வகையில் தொல்லைகள் குறுக்கிடலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் பலனை எதிர்பார்க்காமல் பாடுபட வேண்டும். ஜூன் 27,28,29ல் மன உளைச்சலுக்கு ஆளாகலாம் கவனம்.  

மாணவர்கள் முயற்சிக்கு ஏற்ற நற்பலன் காண்பர். அக்கறையுடன் படிப்பது அவசியம். ஆசிரியர், பெற்றோர் வழிகாட்டுதலை ஏற்பது எதிர்கால வளர்ச்சிக்கு துணைநிற்கும். விவசாயிகள் சீரான மகசூல் கிடைக்கப் பெறுவர். கால்நடை வளர்ப்பின் மூலம் எதிர்பார்த்த வருவாய் கிடைக்காது, புதிய சொத்து வாங்கும் எண்ணம் நிறைவேற தாமதம் ஆகலாம். வழக்கு, விவகாரங்களில் சுமாரான முடிவு கிடைக்கும்.

பெண்களால் குடும்பம் சிறந்து விளங்கும்.  குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து போகவும். வேலைக்கு செல்லும் பெண்கள் கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு சுமாராகவே இருக்கும். கோரிக்கைகள் நிறைவேறாமல் போகலாம். இதனால் வேலையில் வெறுப்புணர்ச்சி ஏற்படலாம்.

பொறுமையும், நிதானமும் தேவை. திடீர் இடமாற்றம் ஏற்படலாம். ஜூன் 22,23,24 அனுகூலமான நாட்களாக அமையும். ஆடை, அணிகலன்கள் வாங்கலாம். ஜூலை 2,3ல் விருந்து, விழா என சென்று வருவீர்கள்.  சகோதர வழியில் பணஉதவி கிடைக்கும். சனியால் வெளியூர் பயணம், வெளியூரில் தங்கும் சூழ்நிலை உருவாகும். மின்சாரம், நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும்.

உடல்நிலை சுமாராக இருக்கும். வயிறு தொடர்பான உபாதைகள் வரலாம். செவ்வாயால் ஜூன் 24-ந் தேதிக்கு பிறகு பித்தம், மயக்கம் போன்ற இடர்பாடுகள் வரலாம்.  

* நல்ல நாள்: ஜூன்18,19,22,23,24,30 ஜூலை1,2,3,8,9,10,11,12,15,16
* கவன நாள்: ஜூலை4,5 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 1,2
* நிறம்: ஊதா, வெள்ளை

பரிகாரம்:
●  சனியன்று பெருமாளுக்கு அர்ச்சனை
●  வியாழனன்று தட்சிணாமூர்த்திக்கு நெய்தீபம்
●  பவுர்ணமியன்று மாரியம்மனுக்கு மாவிளக்கு

 
மேலும் கார்த்திகை ராசிபலன் (17.11.2019 முதல் 16.12.2019 வரை) »
temple
புதனால் மாத பிற்பகுதியில் நற்பலன் அதிகரிக்கும். சுக்கிரன் நவ.22ல் இடம் மாறினாலும் மாதம் முழுவதும் ... மேலும்
 
temple
இந்த மாதம் புதன் டிச.2 வரை நற்பலன் கொடுப்பார். அதன் பின் அவர் சாதகமற்ற இடத்திற்கு செல்கிறார். இதை கண்டு ... மேலும்
 
temple
இந்த மாதம் டிச.3ல் புதன் சாதகமான நிலைக்கு வருகிறார். மேலும் சூரியன், குரு ஆகியோரால் நன்மைகள் தொடரும். ... மேலும்
 
temple
இந்த மாதம் சுக்கிரன் நவ.22 வரையும், புதன் டிச.2 வரையும் நற்பலன் தருவர். சனி,கேது ஆகியோராலும் நன்மை தொடரும். ... மேலும்
 
temple
கடந்த மாதம் போல் இந்த மாதமும் சுக்கிரனால்  நற்பலன் தொடரும். புதன் டிச.3ல் சாதகமான இடத்திற்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.