பதிவு செய்த நாள்
15
ஜூன்
2019
12:06
சிவகாசி: ஒவ்வொரு மனிதனுக்கும் கண்டிப்பாக ஏதேனும் ஒரு பிரச்னை இருக்கத்தான் செய்யும். கடன் தொல்லை, திருமண தடை, குழந்தை பாக்கியம் இப்படி எண்ணற்ற பிரச்னைகளால் மக்கள் வேதனைப்படுகின்றனர்.
இத்தகைய பிரச்னைகளை சந்திக்கும் மனிதன் நிச்சயமாக இறைவனை நாடுவான். இறை நம்பிக்கை என்பது அனைவருக்கும் உண்டு. மனமுருகி தமது இஷ்டதெய்வத்தை வேண்டுகையில் கண்டிப்பாக பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.
அந்த வகையில் சிவகாசி பஸ் ஸ்டாண்டு அருகில் உள்ள திருமண தடை நீக்கும் துர்கா பரமேஸ்வரியை வழிபட வெளியூர்களிலிருந்தும் பக்தர்கள் வருகின்றனர்.சிவகாசி பஸ் ஸ்டாண்டு அருகே ஆட்டோ தொழிலாளர் சங்கத்தை சேர்ந்தவர்களால் 30 ஆண்டுகளுக்கு முன்பு பனை ஓலையில் அம்பாளை வைத்து வழிபட்டு வந்தனர். கேட்ட வரம் கொடுக்கும் அம்பாளை வழிபட உள்ளூர் மட்டுமன்றி வெளியூர்களிலிருந்தும் பக்தர்கள் வருகின்றனர். 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் அம்பாளை வழிபடுவதற்காக
கட்டடம் எழுப்பினர்.
கோயில் வளாகத்தில், நவகிரகம், நந்தீஸ்வரர், வெள்ளியங்கிரி, பைரவர், முருகன், வள்ளி, தெய்வானை, தெட்சணாமூர்த்தி ஆகிய சுவாமிகளையும் வைத்து சிறப்பு வழிபாடு செய்கின்றனர். திருமண தடை, குழந்தை பாக்கியம், தொழில் விருத்தி போன்றவற்றிற்கு இங்கு வழிபடுவதால் தடைகள் நீங்குகிறது.
பெங்களூரிலிருந்த சுற்றுலாவிற்கு வந்தவர்கள் இங்கு அம்பாளை வழிபட அவர்கள் நினைத்தது நிறைவேறி உள்ளது. இவர்கள் ஆண்டுதோறும் இங்கு வழிபட வருகின்றனர்.
சென்னை, மதுரை, கோவை என பல்வேறு வெளி மாவட்டங்களிலிருந்தும் மக்கள் இங்கு வந்து வழிபடுகின்றனர். தை மாதம் ரோகினி நட்சத்திரத்தில் வருடாபிஷேகம், ஆடி, வெள்ளி, புரட்டாசி நவராத்திரி சமயங்களில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.
ஆட்டோ தொழிலாளர் சங்கம் தலைவர் பாலசுப்பிரமணியன், "30 ஆண்டுகளுக்கு முன்பு சிவசக்தி என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற துர்கா பரமேஸ்வரி அம்பாளை எங்கள் சங்கத்தின் சார்பில் இங்கு கொண்டு வந்து பனை ஓலையில் வைத்து வழிபட்டோம். 10 வருடங்களுக்கு முன்பு அம்பாளுக்கு கட்டடம் எழுப்பி மற்ற தெய்வங்களையும் வைத்து வழிபடுகிறோம்.
வெளியூரிலிருந்து பக்தர்கள் அதிகம் பேர் வந்து வழிபடுகின்றனர். என்றார்.கோயில் அர்ச்சகர் சக்தி முருகன், "இங்கு வந்து வழிபட்டால் பிரச்னைக்கு உடனடி தீர்வு கிடைக்கிறது. வெளியூர் களிலிருந்தும் மக்கள் அதிகளவில் வருகின்றனர். அம்பாள் மட்டுமல்லாது, தெட்சணாமூர்த்தி, நந்தீஸ்வரர், பைரவருக்கும் பல்வேறு நேர்த்தி கடன் செலுத்தி அம்பாள் அருள் பெற்று செல்கின்றனர், என்றார்.
தொடர்புக்கு: 97892 95586.