பதிவு செய்த நாள்
15
ஜூன்
2019
12:06
புதுச்சேரி: புதுச்சேரி, சாரம் அண்ணாமலை நகரில், தன்வந்திரி சாய் கோவில் திருப்பணி துவக்க விழா மற்றும் பகவான் சீரடி சாய்பாபா சிலை பிரதிஷ்டை நிகழ்ச்சி நடந்தது.
புதுச்சேரி, சாரம் அண்ணாமலை நகரில் தன்வந்திரி சாய் கோவில் திருப்பணி துவக்க விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி, பகவான் சீரடி சாய்பாபா சிலை நுாதன பிம்ப பிரதிஷ்டை செய்யும் நிகழ்ச்சி நடந்தது.முன்னதாக, சிறப்பு யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. இதையடுத்து, பிரதிஷ்டை செய்யப்பட்ட சீரடி சாய்பாபாவின் உருவ சிலைக்கு, சிவாச்சாரியார்கள் புனிதநீர் ஊற்றினர். நிகழ்ச்சியில், முன்னாள் எம்.பி., ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏ., லட்சுமி நாராயணன், பஞ்சவடீ டிரஸ்டி கோதண்டராமன், நுண்கலை ஓவிய பண்பாட்டு மைய தலைவர் மாலதி ராஜவேலு, புரொபஷனல் கூரியர் உரிமையாளர் ரமஷே் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.