பதிவு செய்த நாள்
22
ஜூன்
2019
12:06
புதுச்சேரி: பிள்ளைச்சாவடி சீரடி சாயிபாபா கோவிலில், கும்பாபிஷேக தின விழாவையொட்டி நடந்த பல்லக்கு உற்சவத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். புதுச்சேரி பிள்ளைச்சாவடி சாயிபாபா கோவிலில், சீரடி சாய்பாபா சமுதாய பிரார்த்தனை மண்டப 17ம் ஆண்டு மகா கும்பாபிஷேக விழா மற்றும் 108 கலச அபிஷேகம் நடந்தது.
அதையொட்டி, கடந்த 19ம் தேதி யாகசாலை பூஜை நடைபெற்றது. 20ம் தேதி காலை இரண்டாம் கால யாகசாலை பூஜையும், மாலை வடுக பூஜை, கன்யா பூஜை, சுமங்கலி பூஜை, தம்பதி பூஜை, குருபூஜையும், மூன்றாம் கால யாக பூஜையும் நடந்தது. கும்பாபிஷேக தினமான நேற்று காலை 5:30 மணிக்கு நான்காம் கால யாக பூஜையை தொடர்ந்து, 9:15 மணிக்கு கடம் புறப்பாடாகி, 9:30 மணிக்கு மகா கலசாபிஷேகம் மற்றும் 108 கலசாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, 11:30 மணிக்கு பல்லக்கு உற்சவம் நடந்தது. பல்லக்கில் சாயிபாபா எழுந்தருள செய்யப்பட்டு, பக்தர்களின் ஆட்டம், பாட்டத்துடன் கோவில் உள் பிரகார உலா நடந்தது. மாலை 6:30 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.