காரைக்குடி : சாக்கோட்டை வீரசேகரர் கோயிலில் ஆனி விழா கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 9-ம் நாள் விழாவை முன்னிட்டு நேற்று தேரோட்டம் நடந்தது. காலை 8:30 மணிக்கு வீரசேகரர் பிரியாவிடை, உமையாம்பிகை தாயார், விநாயகர் தேருக்கு எழுந்தருளினர். சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. மாலை 4:00 மணிக்கு மேல் தேரோட்டம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.