பதிவு செய்த நாள்
01
ஜூலை
2019
03:07
செஞ்சி: செஞ்சி பகுதி சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.செத்தவரை மோன சித்தர் ஆசிரமத்தில் உள்ள மீனாட்சியம்மன் உடனாகிய சொக்கநாதர் கோவிலில் நேற்று (ஜூன்., 30ல்) மாலை 4 முதல் 6 மணி வரை பிரதோஷ சிறப்பு வழிபாடு நடந்தது. சிவஜோதி மோன சித்தர் தலைமையில் கோ பூஜை, நந்தியம்பெருமானுக்கும், சொக்கநாதர், மீனாட்சிய ம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது.
செஞ்சி காமாட்சியம்மன் உடனுறை ஏகாம்பரேஸ்வரர் கோவிலில், ஏகாம்பரேஸ்வரர், காமாட்சியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்தனர். நந்தீஸ்வரருக்கு பால் அபிஷேகம், மாக தீபாராதனை நடந்தது. பெண்கள் அகல் விளக்கேற்றி வழிபட்டனர். பீரங்கிமேடு அருணாச்சலேஸ்வரர் கோவிலில் அருணாச்சலேஸ்வரர், அபிதகுஜாம்பாள்,
நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், மாலை 6 மணிக்கு சுவாமி கோவில் உலா நடந்தது.
சந்தைமேடு காசிவிஸ்வநாதர் கோவிலில் நந்தீஸ்வரருக்கும், காசி விஸ்வநாதருக்கும் சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது.முக்குணம் முக்குன்றநாத உடையார் கோவிலில் முக்குன்றநாதர், நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்தனர். நெகனூர் பொன்னிபுரீஸ்வரர் கோவிலில் பொன்னிபுரீஸ்வரர் மற்றும் நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.