ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் செப்பு தேரோட்டம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஜூலை 2019 11:07
ஸ்ரீவில்லிபுத்தூர்:-ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பெரியாழ்வார் திரு ஆனி உற்சவத்தை முன்னிட்டு செப்பு தேரோட்டம் நடந்தது.
இதையொட்டி , நேற்று (ஜூலை., 10), காலை 9:20 மணிக்கு செப்பு தேருக்கு எழுந்தருளிய பெரியாழ்வாருக்கு ஹரிஷ் பட்டர் சிறப்பு பூஜைகளை நடத் தினார். அறநிலையத்துறை இணை ஆணையர் தனபால், தக்கார் ரவிச்சந்திரன் தலைமையில் பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.தாசில்தார் கிருஷ்ணவேணி, கோயில் செயல் அலுவலர் இளங்கோவன், அனந்த ராம பட்டர், சுதர்சன பட்டர், மணியம் ஸ்ரீ ராம் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.