Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்புவனம் அருகே கீழடி ... சிவகங்கை கோயில்களில் பூச்சொரிதல் விழா சிவகங்கை கோயில்களில் பூச்சொரிதல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி கோவிலில் ஆடி கிருத்திகை விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருத்தணி கோவிலில் ஆடி கிருத்திகை விழா

பதிவு செய்த நாள்

11 ஜூலை
2019
11:07

திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலில் நடைபெற உள்ள ஆடிக்கிருத்திகை விழாவிற்கு, 80, ’சிசிடிவி’ கேமராக்கள் பொருத்தி, பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என, கோவில் அதிகாரி தெரிவித்தார்.

திருத்தணி முருகன் கோவிலில், ஆடிக்கிருத்திகை மற்றும் தெப்பத் திருவிழா, வரும், 24- - 28ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த விழாவிற்கு, தமிழகம் உட்பட பல இடங்களிலிருந்து, லட்சக்கணக்கான பக்தர்கள் காவடிகளுடன் மலைக்கோவிலுக்கு வந்து மூலவரை தரிசிப்பர். அதிகளவில் பக்தர்கள் கூட்டம் வருவதால், குற்றச் சம்பவங்கள் மற்றும் பக்தர்கள் நெரிசல் இல்லாமல் தரிசிப்பதற்கு, கோவில் நிர்வாகம் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து வருகிறது.இது குறித்து, கோவில் அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஆடிக்கிருத்திகை விழா, ஐந்து நாட்கள் நடப்பதால், லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவதால், கடந்த ஆண்டை விட கூடுதல் பாதுகாப்பு அளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மலைக்கோவில், தேவஸ்தான விடுதிகள் மற்றும் திருக்குளம் ஆகிய பகுதிகளில், கடந்தாண்டு, 60 ’சிசிடிவி’ கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தது.நடப்பாண்டில், கூடுதலாக, 20 கேமரா என, மொத்தம், 80 கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.இதை கண்காணிக்க, மலைக்கோவிலில் மட்டும், எட்டு ’எல்.இ.டி., டிவி’ வைக்கப்படும். பக்தர்கள் நெரிசல் இல்லாமல், மூலவரை தரிசிக்க, ’க்யூ’ வரிசை அமைக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: பெரிய காஞ்சிபுரம், செங்குந்தர் பூவரசந்தோப்பு அன்னை ரேணுகாம்பாளுக்கு சீமந்த விழா ... மேலும்
 
temple news
பீகார்: தாயின் உடல்நலம் குணமடைந்ததைத் தொடர்ந்து, சிவபெருமானுக்கு அளித்த நேர்த்திக்கடனை ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவில் ‘சக்தி’ கொலுவில் ஆறாம் நாளான இன்று, மீனாட்சி அம்மனுக்கு ஏகதின ... மேலும்
 
temple news
தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலம் குற்றாலநாதர் சுவாமி கோவிலில் ஐப்பசி விசு திருவிழாவின் சிகர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar