மானாமதுரை : மானாமதுரை வீர அழகர் கோயில் ஆடி பிரம்மோற்ஸவ விழாவில் தீர்த்தவாரி நிகழ்ச்சிக்காக வீரஅழகர் வெள்ளைக்குதிரை வாகனத்தில் பட்டத்தரசி மண்டகப்படிக்கு எழுந்தருளினார்.
மானாமதுரை வீர அழகர் கோயில் ஆடி பிரம்மோற்ஸவ விழா கடந்த 7ந் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சிகளான திருக்கல்யாணம்12 ந் தேதியும்,தேரோட்டம் 15ந் தேதியும் நடைபெற்றது.நேற்று காலை தீர்த்தவாரி நிகழ்ச்சிக்காக வீரஅழகர் வெள்ளைக்குதிரை வாகனத்தில் கோயிலில் இருந்து கிளம்பினார், அவரை பட்டத்தரசி கிராமத்தார்கள் மேள, தாளங்கள் முழங்க வரவேற்று அழைத்துச் சென்றனர். இன்று உற்ஸவ சாந்தியோடு விழா நிறைவு பெறுகிறது.