தேவகோட்டை : தேவகோட்டை சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜையும்,தொடர்ந்து திருவிளக்கு பூஜையும் நடந்தது.
தேவகோட்டையில் மழை பெய்ததால் பெண்கள் நின்றபடியே விளக்கேற்றி அம்மனை வழிபட்டனர்.* தேவகோட்டை அழகாபுரி நடுத்தெரு வடக்கு முக மஞ்சன பேச்சி முத்துமாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழாவையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. நேற்று முன்தினம் பெண்கள் விளக்கேற்றி திருவிளக்கு பூஜை செய்தனர். தேவகோட்டை நித்யா கல்யாணபுரம் சவுபாக்ய துர்க்கையம்மன் கோவிலில் , ஆடி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு யாகம் நடந்தது.தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் சிறப்பு பூஜைகள் நடந்தன. அம்மன் சன்னதியில் சுமங்கலி பூஜையும் நடந்தது.