திருநள்ளார் நளன் குளம் சுத்தம் செய்யும் பணியில் ஊழியர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஆக 2019 04:08
காரைக்கால்: திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில் நளன் குளத்தில் பக்தர்கள் விட்டு செல்லும் பொருட்களை கோவில் நிர்வாகம் ஊழியர்கள் மூலம் அகற்றும் பணியில் ஈடுபடுகின்றனர்.
காரைக்கால் திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனீஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். நவக்கிரக ஸ்தலங்களில் சனிபரிகார ஸ்தலமாக திருநள்ளார் விளங்குகிறது. இதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டு வருகிறது. மேலும் சனிக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்ட வருகிறது. இதனால் பக்தர்கள் வசதிக்காக கோவில் நிர்வாகம் பல்வேறு நடவடிக்கை எடுத்துள்ளது. பக்தர்கள் அதிகாலை நளன் குளத்தில் குளித்துவிட்டு அருகில் உள்ள விநாயகர் கோவிலில் தேங்காய் உடைத்து வழிபட்டபின் சனி பகவானை தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் பக்தர்கள் நளன் குளத்தில் குடிப்பதற்கு பக்தர்கள் நல்லெண்ணெய். சீயக்காய். ஷாம்பு மற்றும் குளியல் சோப்பு ஆகியவை பயன்படுத்துகின்றனர் இதனால் குளத்தில் தண்ணீர்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டு பின் வாரத்திற்கு ஒரு முறை கோவில் நிர்வாகம் தண்ணீரை வெளியேற்றி மீண்டும் புது தண்ணீரை விடும் நிலை ஏற்பட்டு வருகிறது. மேலும் பக்தர்கள் தேவையற்ற பொருட்களை தண்ணீரில் போடுவதற்கு கோவில் நிர்வாகம் தடைவிதித்துள்ளது. இதையும் மீறி பக்தர்கள் தேவையற்ற பொருட்கள் தண்ணீரில் போடுவதால் தண்ணீர் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கோவில் நிர்வாகம் ஊழியர்கள் உதவியுடன் குளத்தில் உள்ள பொருட்களை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே பக்தர்கள் குளித்து விட்டு செல்லும் போது தாங்கள் பயன்படுத்தும் பொருட்களை அருகில் உள்ள குப்பைத் தொட்டியில் போட வேண்டும் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.