பதிவு செய்த நாள்
28
ஆக
2019
11:08
திருப்பதி: திருப்பதி தேவஸ்தான கருவூலத்தில், பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த, 5.4 கிலோ எடையுள்ள ஆபரணங்கள் மாயமானதாகவும், இதற்காக, கருவூலத்தின் உதவி நிர்வாக அதி காரி, சீனிவாசலு சம்பளத்திலிருந்து மாதம், 25 ஆயிரம் ரூபாயை பிடித்தம் செய்து, இழப்பை சரி செய்வதாகவும், பா.ஜ., செய்தி தொடர்பாளர் பிரகாஷ் ரெட்டி குற்றம் சாட்டியுள்ளார்.
ஆனால், காணாமல் போனதாக கூறப்பட்ட நகைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக, தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.திருப்பதி பத்திரிகையாளர் சங்கத்தில்,பா.ஜ., செய்தி தொடர் பாளர் பிரகாஷ் ரெட்டி கூறியதாவது:திருப்பதியில் உள்ள தேவஸ்தான கருவூலத்தில், பாது காப்பாக வைக்கப்பட்டிருந்த ஆபரணங்களில், ஒரு வெள்ளி கிரீடம், இரண்டு தங்க மோதி ரங்கள், இரண்டு தங்க நெக்லஸ்கள் காணாமல் போய்விட்டன. இவற்றின் மொத்த எடை, 5.4 கிலோ.கடந்த நவம்பரில், கருவூலத்தில் நடத்தப்பட்ட ஆய்வின் போது, ஆபரணங்கள் மாய மானது தேவஸ்தான அதிகாரிகளுக்கு தெரிய வந்தது.உண்மையை வெளியில் சொல்ல தயங்கிய தேவஸ்தான அதிகாரிகள், காணாமல்போன ஆபரணங்களின் மதிப்பு, 7.36 லட்சம் ரூபாய் என, மதிப்பீடு செய்தனர்.
அந்த தொகைக்காக, கருவூலத்தின் உதவி நிர்வாக அதிகாரி, சீனிவாசலு ஊதியத்திலிருந்து, மாதம், 25 ஆயிரம் ரூபாயை, ரகசியமாக பிடித்தம் செய்கின்றனர்.இதுதவிர, 19 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, வேறு ஆபரணங்கள் காணாமல் போயிருப்பதும் தெரியவந்துள்ளது.எனவே, பக்தர்களின் சந்தேகங்களை போக்கும் வகையில், ஆபரண இருப்பு பற்றி வெள்ளை அறிக்கை ஒன்றை, தேவஸ்தானம் வெளியிடவேண்டும். தவறினால், போராட்டம் நடத்தி, உண்மையை வெளியில் கொண்டு வருவோம்.இவ்வாறு, அவர் கூறினார்.இதற்கிடையே, திருப்பதியில் உள்ள தேவஸ்தான கருவூலத்தில், காணாமல் போனதாக கூறிய ஆபரணங்கள் கண்டுபிடிக் கப்பட்டதாக, தேவஸ்தான செயல் அதிகாரி அனில்குமார் சிங்கால் கூறினார்.