ஸ்ரீவில்லிபுத்துார் முத்துமீனாட்சியம்மன் கோயில் வருஷாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஆக 2019 12:08
ஸ்ரீவில்லிபுத்துார் : கிருஷ்ணன்கோவில் வி.பி.எம்.எம்.மகளிர் கல்லூரி வளாகத்திலுள்ள முத்து மீனாட்சியம்மன் கோயிலில் வருஷாபிஷேகம் நடந்தது. சேர்மன் சங்கர் தலைமை வகித்தார். தாளாளர் பழனிசெல்வி முன்னிலை வகித்தார். கோவை கவுமாரமடத்தின் தவத்திரு குமரகுருபர சுவாமிகள் ஆசியுரையாற்றினார். முதல்நாள் விழா கணபதி மற்றும் வித்யா, அஷ்டலட்சுமி ஹோமத்துடன் துவங்கியது. இரண்டாம்நாள் விழாவில் கோபூஜை, பரிபூஜை, யானை மற்றும் ஒட்டக பூஜைகளுடன், முத்துமீனாட்சியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.