மதுரை, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு துாய்மை தலத்திற்கான விருது கிடைத்துள்ளது. மத்திய அரசின் துாய்மை பாரத திட்டத்தின் கீழ் இக்கோயிலுக்கு இரண்டாம் பரிசு கிடைத்துள்ளது.
இக்கோயிலை சுற்றி 25 மின்னணு கழிப்பறைகள், குப்பைகள் தரம் பிரித்து சேகரித்தல், பிளாஸ்டிக் தடை, 24 மணி நேரம் துப்புரவு பணி, பக்தர்களை அழைத்து செல்ல நவீன பேட்டரி கார் வசதி போன்ற துாய்மை மற்றும் மேம்பாட்டு பணிகளை மாநகராட்சி மேற்கொண்டது. இதற்காக சிறந்த துாய்மை தலமாக இக்கோயில் தேர்வு செய்யப்பட்டு, டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி கமிஷனர் விசாகனுக்கு மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத், இணை அமைச்சர் ரத்தன்லால் கட்டாரியா ஆகியோர் விருதும், சான்றும் வழங்கினர்.