பண்ருட்டி: பணப்பாக்கம் அங்காள பரமேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. பண்ருட்டி அடுத்த பணப்பாக்கம் எம்.ஜி.ஆர்.நகரில் உள்ள செல்வ விநாயகர், பாலமுருகன், அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்றுமுன்தினம் நடந்தது.
விழாவையொட்டி கடந்த 7ம் தேதி காலை, விக்னேஸ்வர பூஜை, கோமாதா வழிபாடு மாலை 6:00 மணிக்கு விநாயகர் வழிபாடு, காப்பு கட்டுதல், தேவர்கள் வழிபாடு, அஷ்டபந்தனம் சாத்துதல் ஆகியவை நடந்தது. நேற்று முன்தினம் (8 ம் தேதி) காலை 9:30 மணிக்கு விமான கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில் தொரப்பாடி அ.தி.மு.க. நகர செயலாளர் கனகராஜ், ஒன்றிய செயலாளர் கந்தன், பண்ருட்டி நகர செயலர் முருகன், முன்னாள் துணை செயலர் வனராஜ், சின்னபேட்டை முருகன், வக்கீல் ஆனந்தன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.