பதிவு செய்த நாள்
13
செப்
2019
02:09
திருப்புல்லாணி:திருப்புல்லாணி ஆதிஜெகநாதப்பெருமாள் கோயில் 108 வைணவ திவ்யதேசங் களில் 44வது ஆக விளங்குகிறது. பத்மாஸனித்தாயார் சன்னதியில் உலக நன்மை வேண்டியும், நல்ல பருவமழை பெய்திடவும் கோரி தொடர்ந்து காலை முதல் இரவு 7:00 மணி வரை லட்சார்ச் சனை நடக்க உள்ளது.
இன்று செப்., 13, 14, 15 ஆகிய மூன்று நாட்களில் 5 காலங்களிலும் கோயில் ஸ்தானிக பட்டாச் சாரியார்களால் நடக்கிறது. அஷ்டோத்திரம், விஷ்ணு சகஸ்ரநாமம், உள்ளிட்டவை களால் மலர், குங்குமத்தால் அர்ச்சனை, விஷேச திருமஞ்சனம்,சாற்றுமுறை கோஷ்டி பாராயணம் உள்ளிட்டவைகள் நடக்க உள்ளது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான, தேவஸ்தான நிர்வாகத்தினர், பத்மாஸனித்தாயார் கைங்கர்ய சபையினர் செய்து வருகின்றனர்.