முருகனின் பெற்றோர் சிவனும் பார்வதியும் என எல்லோருக்கும் தெரியும். சிவம் என்பதற்கு ’மங்களம்’ என்பது பொருள். பார்வதியை ’மங்களாம்பிகை’ என்றும் அழைப்பர். ’சர்வ மங்கள மாங்கல்யே சிவே’ என்னும் ஸ்லோகம் தேவியின் மங்களத் தன்மையை சிறப்பிக்கிறது. இவர்களின் பிள்ளையான முருகனும் மங்களத்தன்மை மிக்கவர் என்பதால், மங்களவார் எனப்படும் செவ்வாயன்று இவரை வழிபடுகின்றனர். நவக்கிரகங்களில் ஒருவரான செவ்வாய்க்கு ’மங்களன்’ என்றும் பெயருண்டு. செவ்வாயன்று முருகனை வழிபட்டால் சகோதர ஒற்றுமையும், திருமணத்தடையும் நீங்கும்.