கூடலுார்: கூடலுாரில் மந்தையம்மன் கோயில் விழா 2 நாட்கள் நடந்தது. அதிகாலையில் பெண்கள் மாவிளக்கு எடுத்து வழிபட்டனர்.
அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜை நடந்தது. மாலையில் மாறுவேடம் அணிந்து பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். இவர்களுடன் நுாற்றுக்கணக்கான பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்தனர்.கரகாட்டம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடந்தன. மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. மஞ்சள் நீராட்டம், கோலப்போட்டி, குடும்பத்தலைவிகளுக்கான கயிறு இழுத்தல்போட்டி, ஆண்களுக்கான உறி அடித்தல் போட்டி, சைக்கிள் ஓட்டப்போட்டி, மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை மந்தையம்மன் கோயில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.