நதிகளான கங்கை, யமுனைக்கு மகாவிஷ்ணுவின் சம்பந்தம் உண்டு. அந்த பாக்கியத்தை தானும் பெற வேண்டும் என கண்டகி நதி தவத்தில் ஈடுபட்டது. காட்சியளித்த விஷ்ணு தன் அம்சமான சாளக்கிராம கற்கள் கண்டகி நதிக் கரையில் உற்பத்தியாகும் என வரமளித்தார். இக்கற்கள் விஷ்ணு, நாராயண, நரசிம்ம, வாமன, கிருஷ்ண அம்சத்துடன் பலவிதமான சுருள் ரேகைகள், சக்கரங்கள் கொண்டதாக இருக்கும். நேபாளத்தில் உள்ள ஹரிபர்வத மலையில் பாயும் சக்கர தீர்த்தத்தில் கண்டகி நதி உற்பத்தியாகிறது. இதன் கரையில் சாளக்கிராம கற்கள் அதிகளவில் உள்ள இப்பகுதிக்கு ‘சாளக்கிராமம்‘ என்றே பெயர்.